கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்: தற்போதைய காலத்தில் உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. இப்போதெல்லாம், யாரை பார்த்தாலும் தங்கள் எடை அதிகரிப்பால் கவலையில் உள்ளார்கள். உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் பல வித உணவுமுறைகளை பின்பற்றியும், பல வித உடற்பயிற்சிகளை செய்தும், பலரால் உடல் பருமனை குறைப்பதில் வெற்றிபெற முடிவதில்லை.
கலோரி உட்கொள்ளல்
உண்மையில், எடை இழக்க கலோரி உட்கொள்ளலில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நாள் முழுவதும் நாம் உட்கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகளை எரிப்பது எடை இழப்புக்கு அவசியமானதாக கருதப்படுகிறது. கலோரி உட்கொள்ளல் குறைவாக இருக்கும்போது, உடல் கொழுப்பை ஆற்றலாக மாற்றி அதைப் பயன்படுத்துகிறது. இதனால், உடல் எடை குறையத் தொடங்குகிறது.
பலர் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்காக மிகக் குறைவாகவே சாப்பிடுகிறார்கள் அல்லது உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் தேவையானதை விட குறைவான கலோரிகளை உட்கொள்வது உங்களை பலவீனமாக உணர வைக்கும். இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
எடை இழப்புக்கு கலோரி உட்கொள்ளலை குறைப்பது எப்படி?
எடை இழப்புக்கான கலோரி உட்கொள்ளலை எவ்வாறு குறைப்பது என்று இப்போது கேள்வி எழுகிறது? இந்த பதிவில் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க சில எளிய வழிகளை பற்றி காணலாம். இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது எடையைக் குறைக்க உதவும்.
கலோரிகளை குறைக்க சில எளிய வழிகளை பற்றி இங்கே காணலாம்:
1. உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்கவும்
உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்கவும். புரோட்டீன் சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் தவிர்க்கப்படுகின்றது. புரதம் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. இது கூடுதல் கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
2. தண்ணீர் குடிக்கவும்
கலோரி உட்கொள்ளலைக் குறைக்க எளிதான வழி தண்ணீர் குடிப்பதாகும். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லதபோது, நாம் அதிக பசியை உணர்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், நாம் அதிக உணவை சாப்பிடுகிறோம். இதன் காரணமாக எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆகையால் கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒன்று முதல் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் நிரம்பிய உணர்வு ஏற்படுவதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | டீ குடிப்பதை கை விட்டால்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!
3. சிறிய அளவுகளில் சாப்பிடவும்
இதைப் படித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ஆனால் ஒரு சிறிய தட்டில் உணவை சாப்பிடுவதன் மூலமும் கலோரி அளவைக் குறைக்கலாம். உண்மையில், நாம் ஒரு பெரிய தட்டில் உணவு உண்ணும் போது, உணவின் அளவும் தானாகவே அதிகரிக்கிறது. அதேசமயம், நீங்கள் ஒரு சிறிய தட்டில் சாப்பிடும்போது, நீங்கள் குறைவாக உணவை உட்கொள்ள அது வழிவகுக்கும். இது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவும்.
4. கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அளவை குறைக்கவும்
கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த பொருட்களில் கலோரிகள் அதிகம் இருக்கும். ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், குக்கீகள் மற்றும் இனிப்புகளை உட்கொள்வது உங்கள் கலோரி எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும். மேலும், அவற்றின் அதிகப்படியான நுகர்வு உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். அதனால்தான் இந்த உணவுகளில் இருந்து விலகி இருப்பது அல்லது குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது.
5. உணவில் காய்கறிகளின் அளவை அதிகரிக்கவும்
நீங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க விரும்பினால், உணவில் நார்ச்சத்து அளவை அதிகரிக்கவும். இதற்கு காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். கூடுதலாக, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எடை இழப்புக்கு, சரியான செரிமானம் அவசியம். இதற்கு சாலட் மற்றும் காய்கறிகளை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சனை வருமா? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ