எடை இழப்புக்கு தர்பூசணி மில்க் ஷேக்: நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை குறைப்பதால் உடல் எடை குறையாது, மாறாக நமது உடலின் ஆற்றலில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு எளிய வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கோடை காலத்தை மக்கள் ஆசையுடன் எதிர்பார்க்க தர்பூசணி பழமும் ஒரு முக்கிய காரணமாகும். தர்பூசணி மிகவும் சுவை நிறைந்த பழமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது. தர்பூசணி கோடையில் கிடைக்கும் ரசம் நிறைந்த ஒரு பழமாகும். இதை உட்கொள்வதன் மூலம், நமது உடல் நீரேற்றமாக இருக்கும். ஆகையால் இது கோடை காலத்துக்கு ஏற்ற பழமாக கருதப்படுகின்றது.
மக்கள் பொதுவாக தர்பூசணியை சாலட் அல்லது ஜூஸ் வடிவில் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் எப்போதாவது தர்பூசணி மில்க் ஷேக் செய்து குடித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், கண்டிப்பாக இதை செய்து குடித்துப்பாருங்கள். தர்பூசணி மில்க் ஷேக் தயாரிப்பதற்கான செய்முறையை இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
தர்பூசணி சாப்பிடுவதால் நமது உடலின் செரிமானம் சீராவதோடு, எலும்புகளும் வலுவாக இருக்கும். இதன் பயன்பாடு உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதுமட்டுமின்றி ஆஸ்துமா நோயாளிகளுக்கு தர்பூசணி மில்க் ஷேக் சிறந்தது. தர்பூசணி மில்க் ஷேக் செய்வதும் மிகவும் எளிதானது. அதன் செயல்முறையை இங்கே காணலாம்.
தர்பூசணி மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 1 கப்
கஸ்டர்ட் மில்க் - 1/4 கப் அல்லது சாதாரண பால் 2 கப் (காய்ச்சி ஆறவைத்தது)
தண்ணீர் - 1.5 கப் (கண்டன்ஸ்ட் மில்க் பயன்படுத்தினால் மட்டும்)
வெணிலா சாறு - 1/2 (விருப்பம் இருந்தால்)
பிடித்த ஐஸ்கிரீம்
சில ஐஸ் கட்டிகள்
சுவைக்கு ஏற்ப சர்க்கரை
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் 4 இயற்கை பானங்கள்..! மாரடைப்பு பயம் வேண்டாம்
தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி?
- தர்பூசணி மில்க் ஷேக் செய்ய முதலில் தர்பூசணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் அதை துண்டுகளாக வெட்டி தனியாக வைக்கவும்.
- அதன் பிறகு, கன்டென்ஸ்டு மில்க் மற்றும் தர்பூசணி துண்டுகளை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
- பிறகு குளிர்ந்த தர்பூசணி துண்டுகள், கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர் (கண்டன்ஸ்ட் மில்க் பயன்படுத்தினால் மட்டும்) மற்றும் வெண்ணிலா சாறு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போடவும்.
- இதற்குப் பிறகு, இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்து மில்க் ஷேக் தயார் செய்யவும்.
- இப்போது உங்கள் சுவையான மற்றும் குளிர்ந்த தர்பூசணி மில்க் ஷேக் தயார் ஆகிவிட்டது.
- பிறகு சர்விங் கிளாஸில் ஊற்றி ஐஸ்கிரீம் கொண்டு அலங்கரித்து குளிர வைத்து பரிமாறவும்.
உடல் எடை குறைக்க:
தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இதனால், தர்பூசணி பழம் மற்றும் அதன் பானங்கள் என எதை உட்கொண்டாலும், வயிறு நிரம்பிய உணர்வு மேலோங்கி இருக்கும். இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. உடல் எடையை குறைக்கும் பல கூறுகள் இதில் காணப்படுகின்றன. ஆகையால், உடல் எடையை குறைக்க ஏற்ற பானமாக இது கருதப்படுகின்றது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Insomnia: தூக்கமின்மை பிரச்சனையா... ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ