Symptoms of Kidney Failure: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு அனைத்து உறுப்புகளும் ஆரொக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும். அதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அது உடலில் சீரான செயல்பாட்டையும், செயல்திறனையும் பாதிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சிறுநீரகங்கள் செயல்படுகின்றன.
உடலில் உள்ள உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ, அவை சேதமடையத் தொடங்கினாலோ, நமது உடல் அதற்கான அறிகுறிகளை நமக்கு காட்டுகிறது. சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், நமது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியம். இந்த அறிகுறிகளை நாம் புறக்கணிக்கக்கூடாது.
சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகள் சிறுநீரில் காணப்படுகின்றன. சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள் சிறுநீரக நோயைக் குறிக்கின்றன. சிறுநீர் கழிப்பதில் மாற்றங்களைக் கண்டால், அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரக செயலிழப்பின் 7 அறிகுறிகளைப் பற்றி இங்கே காணலாம்:
1. அடர் பழுப்பு நிறத்தில் சிறுநீர்: உங்கள் சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும் போது, சிறுநீரின் நிறம் அடர் பழுப்பு நிறமாக மாறும். உட்புற இரத்தப்போக்கு காரணமாக இந்த அறிகுறி ஏற்படுகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
2. குறைவான சிறுநீர் வெளியேற்றம்: ஒரே நேரத்தில் முழுமையாக, சரியாக சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றால், இதுவும் சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், குறைவாக சிறுநீர் கழிப்பீர்கள், அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம்.
3. சிறுநீரில் இரத்தம்: பல நேரங்களில் சிறுநீரில் இரத்தம் வருகிறது. இதில் சிறுநீருடன் வெளிர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு புள்ளிகளும் காணப்படலாம். இதன் காரணமாக சிறுநீரின் நிறம் வித்தியாசமாகத் தெரியும். இதையும் சிறுநீரக நோயின் அறிகுறியாக கருத வேண்டும்.
4. வீக்கம்: கணுக்கால், விரல்கள் மற்றும் முகத்தில் வீக்கம் இருந்தால், அதுவும் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உடனடியாக மருத்துவரை கண்டு ஆலோசனை பெறுவது மிக அவசியமாகும்.
5. சிறுநீரில் நுரை: சிறுநீரில் குமிழ்கள் மற்றும் நுரை தெரிந்தால், அதுவும் உங்கள் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். இதற்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
6. வறண்ட சருமம்: நமது தோல் மிகவும் வறண்டு, அரிப்பு ஏற்பட்டால், அதையும் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசிய சிறுநீரக அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவுக்கப்பட்டுள்ளது.
7. தூக்கமின்மை: சிறுநீரகங்கள் சேதமடையத் தொடங்கும் போது, உடலில் இருந்து நச்சுகள் வெளியேற முடியாது. இதனால் உடலில் பல வித அசவுகரியங்கள் ஏற்படும். இது தூக்க பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இதன் காரணமாக இரவில் தூங்க முடியாமல் இருக்கும்.
ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கான குறிப்புகள்
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சில விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்
- போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- உப்பு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.
- எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- சுவாச பயிற்சிகளும் நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ