இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து கடந்த வியாழக்கிழமை மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இறந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா இன்ஸ்டாகிராம் இதனை பதிவிட்டுள்ளார். “பிரதமர் மன்மோகன் சிங் ஜியின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எங்கள் தேசத்திற்கு நீங்கள் செய்த சேவைக்கு நன்றி. உங்கள் பொருளாதாரப் புரட்சி மற்றும் முற்போக்கான மாற்றங்களுக்காக நீங்கள் எப்போதும் நினைவுகூரப்படுவீர்கள்”என்று வத்ரா தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் மறைவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இன்று இரவு 9.51 மணிக்கு இறந்துள்ளார் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பிரியங்கா காந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றி உள்ளார். 1991 முதல் 1996 வரை பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். அதன் பிறகு நிதியமைச்சராக மன்மோகன் சிங் புகழ் பெற்றார். மேலும் இந்த ஆண்டு தொடக்கம் வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் மன்மோகன் சிங்.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றலாம்... தேதியையும் மாற்றலாம்... இதோ வழிமுறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ