Weight Loss Tips: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் பலர் தங்கள் எடை அதிகரிப்பால் சிரமத்தில் உள்ளனர். தொப்பையில் சேரும் கொழுப்பு (Belly Fat) மற்றும் எடை அதிகரிப்பால் பலர் செய்வதறியாமல் தவிக்கின்றனர். இதற்காக மக்கள் பல்வேறு வகையான உணவு முறைகளையும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றுகின்றனர். மேலும், உடல் எடை கூடாமல் இருக்க மக்கள் பல வகையான உணவு கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகின்றனர். ஆனால், ஒருசில விஷயங்களைக் கவனித்து, உணவில் சிலவற்றை சேர்த்து, சிலவற்றை தவிர்த்து கட்டுப்படுத்தினால், உடல் எடை அதிகரிக்காது. நாம் நமது உணவில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் அவை நம் உடல் எடையை எவ்வாறு அதிகரிக்கின்றன என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவில் இருந்து இந்த 4 விஷயங்களை கண்டிப்பாக நீக்க வேண்டும்:
1. சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்
உடல் எடையை குறைக்க விரும்பினால், நாம் அடிக்கடி உட்கொள்ளும் சிப்ஸ் (Chips) போன்ற வறுத்த உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ், அதாவது தின்பண்டங்களை நீக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் மற்றும் அதிக உப்பு நிறைந்துள்ளன. இது உடல் எடையை வேகமாக அதிகரிக்கும். ஆகையால் எடையைக் கட்டுப்படுத்த விரும்பும் நபர்கள் இந்த இரண்டு பொருட்களையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. பிஸ்கட் மற்றும் கேக்குகள்
பிஸ்கட் மற்றும் கேக் சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். இந்த உணவுகளில் அதிக அளவில் மைதா மாவு உள்ளது. மேலும் இவை அதிகமாக பதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. இவை இரண்டையும் உட்கொள்ளும் போது, இவற்றில் இருக்கும் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை விரைவாக எடையை அதிகரிக்கும். ஆகையால், சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமெனில், இந்த இரண்டையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | அவக்கேடாவில் இத்தனை சத்துக்களா? முருங்கையுடன் ஊட்டச்சத்து போட்டிபோடும் ஆனைக்கொய்யா
3. சோடா மற்றும் சாஸ்
சோடா மற்றும் சாஸ் இரண்டும் உங்கள் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இவை இரண்டும் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டுகின்றன. இவை உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதன் காரணமாக, வயிற்றின் சர்க்கரை வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால், எடை வேகமாக (Weight Loss) அதிகரிக்கும். இது பசியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிறது. ஆகையால் இவற்றை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
4. அதிக கலோரி உணவுகள்
அதிக கலோரி உணவுகள் நமது எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். உருளைக்கிழங்கு, மைதா மாவு, வாழைப்பழம் மற்றும் அரிசி போன்றவை இவற்றில் அடங்கும். இவை விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பாதிக்கின்றன. இந்த உணவுகளை உண்ணும் போது உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஆகையால் இவற்றை தவிர்ப்பது மிக அவசியமாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மறதியா இல்லை நினைவாற்றல் குறைபாடா? இரண்டுக்கும் உள்ள நூலிழை வித்தியாசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ