WhatsApp-ன் புதிய அப்டேட்டின் மூலம், நீக்கப்பட்ட வீடியோ, போட்டோக்களை திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
பிரபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது புது வசதியுடன் வாடியக்கையாளர்களை கவர வந்துள்ளது. பொதுவாக WhatsApp-ல் அனுப்பப்படும், பெறப்படும் வீடியோ போட்டோக்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம்.
ஆனால் இந்த குறையினை போக்கும் வகையில் தற்போது WhatsApp புதிய அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது. WhatsApp-ல் பெறப்பட்ட, அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை திரும்ப பெற இந்த அம்சம் உதவுகிறது.
பொதுவாக WhatsApp-ல் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு WhatsApp ஆன்லைன் நிணைவகத்தில் சேமித்து வைக்கப்படும். எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது re-download என்னும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் என தெரிவித்துள்ளது.
இந்த வசதியானது WhatsApp-ன் 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய WhatsApp பதிப்பினை இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் Goole PlayStore-ல் சென்று அப்டேட் செய்துக்கொள்ளலாம்.