காய்கறி கடையில் காசு கேட்டு கலாட்டா செய்த காங்கிரஸார்... மூவர் சஸ்பெண்ட் - பாத யாத்திரை பரிதாபங்கள்

பாரத ஜோடோ யாத்திரைக்காக, காய்கறி கடையில் காசு கேட்டு, கடை அடித்தது மட்டுமின்றி கடை உரிமையாளரையும் தாக்கிய மூன்று காங்கிரஸ் தொண்டர்களை, கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன் இடைநீக்கம் செய்துள்ளார்.  

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2022, 02:27 PM IST
  • பாரத் ஜோடோ யாத்ரா பயணத்தை ராகுல் காந்தி 150 நாள்கள் மேற்கொள்கிறார்.
  • தினமும் 25 கி.மீ நடைபயணம் நடைபெறுகிறது.
  • கேரளாவில் 18 நாள்கள் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
காய்கறி கடையில் காசு கேட்டு கலாட்டா செய்த காங்கிரஸார்... மூவர் சஸ்பெண்ட் - பாத யாத்திரை பரிதாபங்கள் title=

'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். 

தமிழ்நாட்டில் நான்கு நாள் பயணத்தை முடித்த ராகுல், சென்ற செப்.11ஆம் தேதி கேரளாவில் தனது பயணத்தை தொடர்கிறார். 18 நாள்கள் கேரளாவில் நடைபயணத்திற்கு திட்டமிட்டிருந்த ராகுல், நேற்று நாள் ஓய்வுக்கு பிறகு இன்று கொல்லத்தில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

மேலும் படிக்க | ராகுல் காந்தி நடப்பதால் என்ன நடக்கும்?... சீமான் கேள்வி

இந்நிலையில், கொல்லத்தில் ராகுல் காந்தி நடைபயணம் வருவதை முன்னிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அந்த வகையில், பாரத ஜோடா யாத்திரைக்கு நிதி திரட்டுவதாகக் கூறி, கையில் பாரத ஜோடா யாத்திரை போஸ்டரை கையில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கும்பல் ரூ. 2000 கேட்டுள்ளது.

அந்த கடையின் உரிமையாளர் வெறும் 500 ரூபாயை மட்டும் தந்ததால், அவரின் கடையை அடித்து உடைத்தது மட்டுமல்லாமல், அவரின் கடை பணியாளர்களையும் அந்த காங். தொண்டர்கள் அடித்துள்ளனர்.மேலும், கேட்கும் பணத்தை தராமல் யாரும் உயிரோடு போக முடியாது என கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அது வேகமாக பகிரப்பட்டது. 

ஐந்து பேர் கொண்ட அந்த கும்பலில், இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளர் அனீஸ் கானும் அதில் ஒருவர் என தெரியவந்தது. காங்கிரஸ் பிரமுகர்களின் இந்த செயலை தொடர்ந்து, காய்கறி கடையின் உரிமையாளர் எஸ்.ஃபவாஸ், குன்னிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி மூன்று பேரை கேரளா காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் இடைநீக்கம் செய்துள்ளார். அவர்கள் தங்களின் சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, இத்தகைய செயல்கள் மன்னிக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். கார்ப்பரேட் நன்கொடைகளைப் பெறும் மற்றவர்களைப் போல் அல்லாமல், கட்சி தானாக முன்வந்து சிறு நன்கொடைகளை பெற்று கட்சியை வளர்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பல ஆண்டுகளாக சிறு நன்கொடைகளை பெற்று வருகின்றனர். அவர்களின் அரசியல் அடிமட்டத்தில் தான் இயங்குகிறது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இந்த மூன்று பேரும் உடனடியாக நீக்கம் செய்து கேரள காங்கிரஸ் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்" என காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ.,  தூரத்தை 150 நாள்களில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். 12 மாநிலங்களில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை அடுத்து கேரளா வந்துள்ள அவர், இங்கு 18 நாள்கள் நடைபயணத்தை மேற்கொள்கிறார். அதன்பின், செப்.30ஆம் தேதி கர்நாடகாவை அடையும் அவர், 21 நாள்கள் அங்கு நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து வட மாநிலங்கள் நோக்கி பயணம் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 'உங்களுக்கு நாங்க பொண்ணு தரோம்' - தமிழ் பெண்களிடம் வெட்கப்பட்ட ராகுல் காந்தி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News