இந்தியாவில் வேர் பரப்பும் ஒமிக்ரான் BF.7 - கட்டுப்படுத்துமா அரசு?

BF.7 Variant in India : சீனாவிலும், அமெரிக்காவிலும் பாதிப்பு எண்ணிக்கையில் அதிகம் காணப்படும் ஒமிக்ரான் BF.7 கொரானோ தொற்று இந்தியாவில் நான்கு பேரிடம் கண்டறியப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2023, 06:40 AM IST
  • நால்வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
  • நால்வரும் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்கள்.
  • நால்வரும் நலமுடன் இருப்பதாக தகவல்.
இந்தியாவில் வேர் பரப்பும் ஒமிக்ரான் BF.7 - கட்டுப்படுத்துமா அரசு? title=

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை, அரசு தொடர்ந்து கண்காணித்து வர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்குட்படுத்தி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கின்றனர். 

அந்த வகையில், சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்று வகை இந்தியாவிலும் சில பரவியிருந்த நிலையில், அதனை கண்டறியும் பொருட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் சோதனை மாதிரிகளை, மரபணு வரிசைமுறை ஆய்வுக்குட்படுத்தி தொற்றின் வகையை கண்டறிதலும் தற்போது அவசியமாகி வருகிறது. 

மேலும் படிக்க | போதையில் பெண் மீது சிறுநீர் கழித்த பயணிக்கு 30 நாள் தடை விதித்தது ஏர் இந்தியா!

இந்நிலையில், மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நான்கு பேரிடம், ஒமிக்ரான் BF.7 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை நேற்று (டிச. 4) அறிவித்துள்ளது. இந்த நால்வரும் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, மேற்கு வங்க மூத்த சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய வகை தொற்று பாதிப்புக்கு உள்ளான அந்த நால்வரும் நலமுடன் இருப்பதாகவும், தற்போது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். நால்வரில் மூன்று பேர் அம்மாநிலத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் பிகாரை சேர்ந்தவர் என்றாலும் தற்போது மேற்கு வங்கத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். 

கொல்கத்தா விமான நிலையத்தில், வெளிநாட்டு பயணி உள்பட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், சிறிதுநாள்களில் அவர்கள் ஒமிக்ரான் BF.7 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டது. தற்போது, தலைநகர் டெல்லியிலும் சற்று கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. நேற்று புதிய 6 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

சீனா கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்களை பகிராமல் இருப்பதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, சீனாவில் தற்போது நிலவும் பாதிப்பு எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் விகிதங்கள், மரபணு வரிசைமுறைகள் உள்ளிட்ட கொரோனா தொற்றை குறித்து கூடுதல் விவரங்களை சீனா பகிர வேண்டும் என்றும், பகிரப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோட்டிக் காட்டுவதற்காக சீன அதிகாரிகளை, உலக சுகாதார அமைப்பினர் சமீபத்தில் சந்தித்ததாக அந்த அமைப்பின் பொது இயக்குநர் ஜெனரல், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஷாக்கில் இல்லத்தரசிகள்..எல்பிஜி விலை உயர்வு, இனி அதிக பணம் செலவாகும்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News