தற்போது பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் சர்ட் அல்லது டீ சர்ட் அணியாமல் உள்ளே அணியும் பனியனுடன் வருகின்றனர். பல பிரபலங்கள் இதனை பின்பற்றுவதால் பொதுமக்களும் இந்த பழக்கத்தை பின்தொடர்கின்றனர். கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் ஏர்போர்ட், ஷாப்பிங், ஷூட்டிங் போன்ற இடங்களுக்கு பனியனுடன் வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவில் பங்கேற்க இந்தியா வந்து இருந்தார். அவரும் கூட நிகழ்ச்சி முழுவதும் பனியனுடன் காணப்பட்டார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இது பொது நிகழ்ச்சி என்றாலும், நீதிமன்றத்திலும் ஒரு நபர் பனியனுடன் வந்துள்ளார்.
மேலும் படிக்க | 121 பேரை காவு வாங்கிய ஹத்ராஸ் சம்பவம்... வாய் திறந்தார் போலே பாபா - என்ன சொன்னார்?
நாட்டின் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு இடமாக நீதிமன்றங்கள் உள்ளது. அதிலும் உச்ச நீதிமன்றம் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கும் ஒரு இடம் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஒரு வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, இணைந்த ஒரு நபர் பனியன் அணிந்து இருந்தார். இதனை பார்த்த நீதிபதி பி.வி.நாகரத்னா, 'யார் பனியன் அணிந்து இருப்பது?' அவர் ஏதேனும் கட்சியை சேர்ந்தவரா? உடனே அவரை வெளியேற்றுங்கள், நீதிமன்றத்தில் இப்படி ஆடை அணிந்து வரலாமா? தயவு செய்து அவரை வெளியேற்றுங்கள்' என்று நீதிபதி கோபமடைந்தார்.
தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பல வழக்குகள் ஆன்லைனிலும் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விடுமுறை நாட்களில் அவசர வழக்கை நீதிபதிகள் ஆன்லைன் மூலம் விசாரணை நடத்துகின்றனர். விசாரணையுடன் தொடர்புடைய நபர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஆன்லைனில் இணைந்து வழக்கு தொடர்பாக பேசுகின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவர் அணிந்து வரும் உடையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நடைபெற்று கொண்டிருந்த போது இதே போன்று ஒரு நபர் பனியன் அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை பார்த்த நீதிபதி, 'எனக்கு யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளப் பிடிக்காது, ஆனால் நீங்கள் திரையுலகில் இருக்கிறீர்கள். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்று எச்சரித்தார். மேலும், மற்றொரு ஆன்லைன் விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் டி-சர்ட் அணிந்து கலந்து கொண்டார். இதனால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் படிக்க | மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ