தில்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியில், மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மூன்று விவசாய சட்டங்களையும் திருத்த தனது அரசாங்கம் தயாராக உள்ளது, ஆனால் இந்தத் திருத்தம் இந்த விவசாயச் சட்டத்தில் தவறுகள் உள்ளது என்றுஅர்த்தமல்ல என்றார்.
நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து பேசினார். விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். புதிய சட்டங்கள் (New Farm Laws) குறித்து மக்களுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்படுவதாகவும், தற்போதைய போராட்டம் என்பது ஒரு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.
I made it clear that if Govt is ready to make amendments, it doesn't mean there is any problem in farm laws. People in a particular state are misinformed: Union Agriculture Minister NS Tomar pic.twitter.com/hbyffh7Y3t
— ANI (@ANI) February 5, 2021
பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi) அரசாங்கமும் விவசாயிகளின் நலனில் உறுதியுடன் இருப்பதாகவும், புதிய சட்டங்களின் நோக்கம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதாகும் என்றும் அவர் கூறினார்.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஒரு மாநில பிரச்சினை என்று தோமர் குறிப்பிட்டார், மேலும் விவசாயிகளின் நிலத்தை இழக்க நேரிடும் என அச்சுறுத்தி தவறான தகவல்களை அளிக்கின்றனர். புதிய சட்டங்களில் இது போன்ற எந்த விதிகளும் இல்லை என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு மாநிலங்களவையில் நன்றி தெரிவிக்கும் உரை குறித்த விவாதத்தில் பேசிய விவசாயத் துறை அமைச்சர் தோமர், எதிர்க்கட்சித் தலைவர்கள் புதிய சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று அழைக்கிறார்கள், ஆனால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர்கள் கூறவில்லை என்று கூறினார்.
விவசாய அமைச்சர்களிடம் சட்டத்தில் 'கறுப்பு' என்றால் என்ன என்பதை விளக்க கடந்த இரண்டு மாதங்களாக கேள்வி எழுப்பு வருகிறோம், அதற்கு பதில் இல்லை என விவசாய அமைச்சர் கூறினார். தற்போதைய போராட்டம் ஒரு மாநில பிரச்சினை என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று கூறினார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR