அகமதாபாத்: மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) குஜராத்தில் குறைந்தது நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்யசபா தேர்தல் எதிர்வரும் நிலையில் இந்த சம்பவம் ஆனது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.
கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நான்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மங்கல் கவித், ஜே.வி.ககாடியா, சோமாபாய் படேல் மற்றும் பிரதியுமான் ஜடேஜா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பாரதீய ஜனதா கட்சியின் (BJP) வேட்டையாடும் முயற்சிகளுக்கு பயந்து, காங்கிரஸ் தனது 20 சட்டமன்ற உறுப்பினர்களை மார்ச் 14 அன்று ராஜஸ்தானில் ஒதுங்கிய இடத்திற்கு அழைத்துச் சென்றது. ஆதாரங்களின்படி, 20 குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 15 பேர் சனிக்கிழமை குறித்த இடத்தில் மறைத்துவைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் ஒரு நாள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை ரிசார்ட்டுக்கு செல்வர் என வட்டாரங்கள் தெரிவித்தன. கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி மற்றொரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை குஜராத்திலிருந்து புறப்படுவார்கள் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள 15-20 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே திரும்பி வருவார்கள் என்றும் தெரிகிறது.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், பாஜக-விற்கு 103 MLA-க்களும், காங்கிரஸுக்கு 73 MLA-க்களும் உள்ளனர்.
ஒரு மாநிலங்களவை வேட்பாளரை வெல்வதற்கு 37 வாக்குகள் தேவைப்படும், இரு கட்சிகளும் தலா இரண்டு இடங்களை வெல்ல போதுமான பலத்தைக் கொண்டுள்ளன. எனினும் சுயேட்சை MLA ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஏப்ரல் 9-ஆம் தேதி மூன்று பாஜக உறுப்பினர்கள் மேலவையில் இருந்து ஓய்வு பெறுவதால், பாஜக தனது அளவை அப்படியே வைத்திருக்க விரும்புகிறது. இதனால் வெள்ளிக்கிழமை நர்ஹரி அமீனை மூன்றாவது வேட்பாளராக அறிவித்தது. பாஜக-வின் இந்த முன்னேற்றம் காங்கிரஸ் கட்சிக்கான எச்சரிக்கை மணியை அடித்தது. இதனையடுத்து MLA-க்களை மாநிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.
பாரதிய பழங்குடியினர் கட்சி (BTP) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) ஒரு வாக்குகளைப் போல மற்ற கட்சிகளிடமிருந்து மூன்று வாக்குகளை பாஜக கொண்டுள்ளது. என்றபோதிலும் அமீனுக்கு தேவையான 37 வாக்குகளைப் பெற, பாஜக-வுக்கு 5 காங்கிரஸ் MLA-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில் பாஜக தற்போது தனது MLA வேட்டையினை மாநிலத்தில் துவங்கியுள்ளது.