West Bengal Bus Accident: ஒடிசா மாநிலம் பாலசோரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் நேற்று முன்தினம் (ஜூன் 2) மாலை விபத்துக்குள்ளாகின. அந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் நேற்று விபத்துக்குள்ளான சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் காயம்
அந்த பேருந்தில், விபத்தில் காயமடைந்து சிகிச்சைபெற்றவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக, இதில் பெரும் அசாம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இந்த விபத்தை தொடர்ந்து மேதினிபூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந் பேருந்து, பிக்-அப் வேன் மீது நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்தில் இருந்த பலருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | பாலசோர் ரயில் விபத்து எப்படி, ஏன் நடந்தது? திடுக்கிடும் காரணம் வெளியானது
அந்த 20 நிமிடம்...
கொல்கத்தா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் வெள்ளிக்கிழமை மாலை ஒடிசா மாநிலம் பாலசோரில் பயங்கரமாக மோதி விபத்தை சந்தித்தன. 6.50 மணியளவில் சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த லூப் தண்டவாளத்தில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிக்னல் கோளாறு காரணமாக சென்றுவிட்டது என கூறப்படுகிறது.
இதனால், சரக்கு ரயிலில் மோதிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மெயின் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதையடுத்து, சுமார் 20 நிமிடங்கள் கழித்து பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து கொல்கத்தாவின் ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ், மெயின் தண்டவாளத்தில் சரிந்துகிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகளில் மோதி விபத்தானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் சோக அலை
இதுவரை, சுமார் 288 பேர் உயிரிழந்தனர் என்றும் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் கூறுகின்றன. கொல்கத்தாவில் இருந்து தெற்கே 250 கி.மீ., தொலைவிலும், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 170 கி.மீ., வடக்கே உள்ள பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையம் அருகே இந்த ரயில் விபத்து நடந்தது.
மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRAF), பல தீயணைப்புப் பிரிவுகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றிற்கு உதவ இராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டது. மேற்கு வங்க அரசும் மருத்துவ ரீதியில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசும், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை ஒடிசா அனுப்பியது.
அங்கிருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவருவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்வதையும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் கணக்கெடுப்பையும் அவர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சோகம்.. இறுகிய முகம்! 280 பேர் பலியான ஒடிசா ரயில் விபத்து ஸ்பாட்டில் பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ