Tokyo Olympics: ஹாக்கி வீராங்கனை வந்தனா மீது சாதி வெறி தாக்குதல்! என்று தீரும் இந்த சாதி மோகம்?

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் சாதியை முன்வைத்து அநாகரீக செயல்கள் நடைபெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2021, 07:53 PM IST
  • இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா எதிர்கொள்ளும் சாதிவெறி தாக்குதல்
  • தலித்துகள் விளையாடியதால் தோல்வி என வகுப்புவாத கும்பல் ரகளை
  • என்று தீரும் இந்த சாதி மோகம்?
Tokyo Olympics: ஹாக்கி வீராங்கனை வந்தனா மீது சாதி வெறி தாக்குதல்! என்று தீரும் இந்த சாதி மோகம்? title=

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை அழைத்துச் சென்ற மகளிர் ஹாக்கி அணி வீரர்களின் வீட்டின் முன்பு ஒரு சில நபர்கள் மகளிர் ஹாக்கி அணியில்  தலித்துகள் அதிகம் விளையாடியதால் தான் இந்தியா தோல்வி அடைந்துவிட்டதாக கூச்சலிட்டனர். 

இது நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்று இதுகுறித்து தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் அவர்கள் ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியது:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி ஆட்டம் வரை அழைத்துச் சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் "வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் சிலர் அநாகரிக நடனம் ஆடியும் , பட்டாசுகள் வெடித்தும் உள்ளனர். 

இதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால் அணியில் தலித்துகள் அதிகம் என்பதால் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி  தோல்வி அடைந்து விட்டதாக சாதி ரீதியாக வசைபாடியுள்ளனர். விளையாட்டுத் துறைகளில் இருந்தும் தலித்துகள் வெளியே அனுப்பபட வேண்டும் எனவும் கூச்சலிட்டுள்ளனர்.

இச்சம்பவம் "உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவார் "ரோசனாபாத் கிராமத்தில் உள்ள இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு  இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

Also Read | கடைசி வரை போராடி இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில் தோல்வியடைந்தது

இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் இதே அணிதான். காலிறுதி போட்டிக்கு இந்தியாவை தகுதியாக்க தென் ஆப்பிரிக்கா உடனான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்ததும் இதே வந்தனா தான்.என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த கொடிய நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பை குறைத்துள்ளது.அதே போல் தேசத்திற்காக விளையாடும் பெருமை மிக்க வீரர்களின் மனதையும் இரணமாக்கியுள்ளது.

ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சரே விரைந்து அவமானத்தை சரி செய்யுங்கள் என்றும்  பாதிக்கப்பட வீராங்கணைகளுக்கு நம்பிக்கையினை விதையுங்கள் என கூறியுள்ளார்.

Also Read | Tokyo Olympics women's hockey: இந்திய வீராங்கனைகள் போராடி தோல்வி

அதே போல் இம்முறை இந்திய பெண்கள் ஹாக்கி அணி நாடு முழுக்க ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இந்த எழுச்சியை உருவாக்கிய பெண்கள் வேளாண் குடும்ப பிண்ணனியை சேர்ந்தவர்கள்.

இது தவிர தன் மகள் போட்டியில் ஆடுவதை பார்க்க வீட்டில் தொலைக்காட்சி கூட இல்லாத மிகவும் எளிய பிண்ணனி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

மற்றொருபுறம் போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த வீராங்கனை மற்றும்  குடிக்கு அடிமையான தந்தையொருவர் போட்டியில் பங்ககேற்கும் தனது பெண்ணிற்கு தந்த மனவுளைச்சல் என இதையெல்லாம் தாண்டி டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெற்றியை நிலைநாட்டிய இவர்களது கதைகளை கேட்க கேட்க நெஞ்சு விம்முகிறது.

Also Read | ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் சிங்க பெண்கள் - 3 பதக்கங்கள் வென்று தந்த தங்க மங்கைகள்!

இந்த வீராங்கனைகளை நாம் சரியாகத்தான் கொண்டாடுகிறோமா என்ற சந்தேகம் எழுகிறது? எனவே அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் 1 கோடி ரூபாய் சிறப்பு பரிசு அறிவிக்க வேண்டும்.

குற்றவாளிகள் அனைவரும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.இதற்கு நீங்கள் உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டும்.

நாடு திரும்பும் இந்திய ஹாக்கி அணிப் பெண்களுக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும். ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா வீட்டிற்கு சென்று தேசமே உன் பின்னால் முழுமையாக நிற்கிறது.என்று ஆறுதல் கூற வேண்டும். 

வந்தனாவுக்கு நீதி கிடைக்கட்டும்! அதற்கு நம் எல்லோரின் குரலும் ஒரு சேர எழும்பட்டும். என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Tokyo Olympics: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News