#ElectionResults: டெல்லி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள்

ராஜஸ்தான் மாநிலம் மற்றும் டெல்லி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2018, 10:14 AM IST
#ElectionResults: டெல்லி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் title=

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.  200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7, 2018 ஆம் அன்று 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இதில் 2,274 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் ஆரம்ப கட்டங்களில், 146 இடத்தில் காங்கிரஸ் 81 இடங்களிலும், பி.ஜே.பி 62 இடங்களிலும், அதே நேரத்தில் 3 சுயேச்சைகள் முன்னோக்கி நகர்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட் தனது தொகுதி டோங்கிவில் முன்னிலை வகிக்கிறார். அதே வேளையில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ஜலாரபத்ன தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால், ராஜஸ்தான் தலைநகரம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சச்சின் பைலட்டின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றனர். 

தலைநகரம் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பு, அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

Trending News