மும்பை செம்பூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதில் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்!
மும்பை செம்பூர் பகுதியில் செயல்படத் வரும் பாரத் பெட்ரோலியம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (ஆகஸ்ட்-8 ஆம் தேதி) திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 43 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக ANI தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இன்று சரியாக மதியம் 2.45 மணியளவில் ஹைட்ரோகிராக்கர் வைத்திருக்கும் இடத்தில் தீபற்றியதாக குறிப்பிட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த இரண்டு தொழிலாளிகளுக்கு பலத்த காயம் ஏற்ற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#Maharashtra: Level- III fire breaks out at Bharat Petroleum Corporation Limited-RMP plant in Chembur; 9 fire tenders, 2 foam tenders and 2 jumbo tankers present at the spot. pic.twitter.com/g7hY7xqeE1
— ANI (@ANI) August 8, 2018
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, தீயை அணைக்கும் உயர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமப்டைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விவரம் தெரியவில்லை.