புதுடெல்லி: ராம நவமி 2022: 10 ஆண்டுகளுக்குப் பிறகு மங்களகரமான யோகம் உருவாகியிருக்கிறது, இந்த முஹூர்த்தத்தில் லட்சுமியின் ஆசீர்வாதம் அபரிதமாக கிடைக்கும்.
இந்த வருடம் மொத்தம் நான்கு முறை புனர்பூச நட்சத்திரம், சூரிய உதயத்துடன் தொடங்குகிறது. ஆனால் ராம நவமி அன்று வரும் ரவி புஷ்ய யோகம் மட்டுமே, அதே நாளில் 24 மணிநேரம் இருக்கும்.
இந்த ஆண்டு ராம நவமியன்று, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் அருமையான கூட்டணியை அமைக்கவிருக்கின்றன. இந்த நாளன்று அதாவது நாளை (2022, ஏப்ரல் 10) சொத்து, வாகனங்கள் மற்றும் புதிய பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
மேலும் படிக்க | ஸ்ரீ ராம நவமி 2022 வழிபடும் முறை, நேரம், நெய்வேத்தியம் மற்றும் பலன்கள்
புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய நன்னாளில் ஸ்ரீ ராமன் பிறந்ததார். அந்த நாளையே ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம். ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டு ராம நவமி அன்று ரவி புஷ்ய யோகம் உருவாகிறது.
ஏப்ரல் 10 ஆம் தேதி சூரிய உதயத்துடன் தொடங்கும் இந்த யோகம், மறுநாள் சூரிய உதயம் வரை இருக்கும். இந்த வருடம் மொத்தம் நான்கு ரவி புஷ்யங்கள் இருக்கும் ஆனால் ராம நவமியின் ரவி புஷ்ய யோகம் மட்டுமே 24 மணிநேரம் இருக்கும். ஷாப்பிங் செய்வதற்கு இது ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது.
அன்னையின் சிறப்பு அருளால் கூட இந்த ஆண்டு நவராத்திரி அதிகமாகவோ குறையவோ இல்லை என்கின்றனர் ஜோதிடர்கள். சைத்ரா நவராத்திரியின் பிரதிபடா, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு அல்லது விற்பனை-ஷாப்பிங் செய்வதற்கு மிகவும் உகந்தவை.
இந்த தேதிகளில் செய்யும் சுப காரியங்களின் பலன்களை மனிதர்கள் நீண்ட காலத்திற்கு பெறுகிறார்கள். சொத்தில் முதலீடு செய்தாலும், வீடு அல்லது கடை கட்டினாலும், இந்த யோகம் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
ராம நவமியன்று உருவாகும் யோகங்கள்
ராம நவமி ஏப்ரல் 10 ஆம் தேதியன்று சர்வார்த்தசித்தி, ரவி புஷ்யம், ரவியோகம் போன்றவற்றால் எல்லாவிதமான சுப காரியங்களுக்கும் ஏற்ற காலம் அமையும்.
இது தவிர, சுகர்மா, திருத்தி யோகமும் இந்நாளில் உருவாகி வருகிறது. சுகர்ம யோகம் ஏப்ரல் 11 மதியம் 12.04 வரை இருக்கும். இதன் பிறகு திருத்தி யோகம் தொடங்கும். இந்த முஹூர்த்தம் ஒரு புதிய வேலையைத் தொடங்குவதற்கும் அல்லது ஷாப்பிங் செய்வதற்கும் மிகவும் உகந்தது.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR