ஐயப்பன் கோவிலில் 13-ஆம் தேதி நடை திறப்பு

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

Last Updated : Feb 10, 2020, 03:39 PM IST
ஐயப்பன் கோவிலில் 13-ஆம் தேதி நடை திறப்பு title=

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 13 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்றாலும், பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 14 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 18 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

பின்னர் 18-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

Trending News