Bangalore Girl Murder Case: பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 26 வயதான பெண்ணின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அண்டை வீட்டார் அந்த பெண்ணின் உறவினருக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது. பெண்ணின் தாயாரும், சகோதிரியும் வந்த பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். வயாலிகாவல் வீட்டிற்கு அந்த பெண் சமீபத்தில்தான் குடியேறியதாக கூறப்படுகிறது, மேலும் தனியாக வசித்து வந்துள்ளார்.
அந்த பெண்ணின் உடல் பாகங்கள் சில நாள்களாக பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தாகவும், அந்த உடல் யாருடையது என்ற அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதுகுறித்து மேற்கு பெங்களூரு பகுதியின் கூடுதல் காவல் ஆணையர் சதிஷ் குமார் கூறுகையில், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கூடுதல் தகவல்களை அளிக்கிறோம் என்றும் கொலை செய்யப்பட்ட அந்த பெங்களூரு வசித்து வரும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.
கூடுதல் ஆணையர் பேட்டி
மோப்பநாய் குழுவுடன், கைரேகை குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தடய அறிவியல் ஆய்வகத்தின் ஒரு குழுவிற்கும் அழைப்பு விடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையர் சதிஷ் குமார் மேலும் கூறுகையில்,"சம்பவம் நடந்த இடம் 1BHK குடியிருப்பாகும். இது வயாலிகாவல் காவல் நிலையம் சரகத்திற்குள் வருகிறது. 26 வயதான பெண்ணின் உடல் வெட்டப்பட்டு அது பிரிட்ஜில் பதப்படுத்திவைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. சம்பவம் இன்று (செப். 21) நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. அந்த பெண் யார் என கண்டுபிடித்துவிட்டோம். நாங்கள் முதற்கட்ட விசாரணையை நிறைவுசெய்ய வேண்டும்" என்றார்.
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
முதலில் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 165 லிட்டர் சிங்கிள் டோர் பிரிட்ஜ் இயக்கத்தில் இருந்தது. அதில் உள் இருந்த உடல் பாகங்களில் புழுக்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெங்களூருவை மட்டுமின்றி அண்டை மாநிலங்களையும் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்த பெண் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், அவர் யாரால் கொல்லப்பட்டார், கொலைக்கான பின்னணி என்ன உள்ளிட்ட இந்த வழக்குகள் குறித்து வேறொரு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்த பெண் மேற்கு வங்கம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்ணின் பெயர் மகாலட்சுமி என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அதிகம் பேசமாட்டார்...
பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்டை வீட்டாரானா மேரி என்பவர் அவரது துக்கத்தை பகிர்ந்துகொண்டார். அதில்,"உயிரிழந்த பெண் நாய்களை வளர்ப்பது குறித்து அடிக்கடி பேசுவார். அதிகம் பேச மாட்டார், வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரின் அண்ணன் சிறிது காலம் வந்திருந்தார். அவருடன் சென்ற பின்னர் வீட்டில் அவர் தனியாகவே இருந்தார்.
இன்றுதான் தெரிகிறது அவருக்கு திருமணமாகிவிட்டது என்று. இவர் இந்த வீட்டுக்கு வந்து 5 மாதங்களே ஆகிறது. காலை 9.30 மணிக்கு புறப்படுகிறார் என்றார் இரவு 10.30 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு திரும்புவார். இன்று அவரின் தாய் - சகோதரி ஆகியோர் வந்திருந்தனர். வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, குளிர்சாதன பெட்டியை அவர்கள் திறந்து பார்த்தனர். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்றார்.
ஷ்ரத்தா வால்கர் சம்பவம்
இந்த சம்பவம் டெல்லியில் நடந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை நினைவுப்படுத்தும் விதத்தில் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று அப்போது 27 வயதான ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவருடன் லிவ்-இன் உறவில் இருந்த காதலன் அஃப்தாப் அமின் பூனாவாலா என்பவர் கொலை செய்து, 35 துண்டுகளாக ஷ்ரத்தாவின் உடலை வெட்டி, அவற்றை குடியிருப்புக்கு அருகில் இருந்த காட்டு பகுதிகளில் வீசியிருந்தார். சில உடற்பாகங்கள் பிரிட்ஜில் இருந்தும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘‘திருப்பதி லட்டு விவகாரத்தில் விரிவான விசாரணை’’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ