புது டெல்லி: "பா.ஜ.க விற்கு (BJP) எதிராக போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள் என்று ஹரியானாவில் துணை ஆட்சியர்(Deputy collector) சர்ச்சையாக பேசியுள்ளார்.
ஹரியானா(Hariyana) மாநிலத்தில் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை அன்று ஹரியானா மாநிலம் கர்னால் (Karnaal) மாவட்டத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலிசார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
அங்கு நடந்த இச்சம்பவம் மாநிலம் முழுவதும் விவசாயிகளின் மத்தியில் பெரும் கோபத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கர்னால் மாவட்டத்தில் பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள் என்று அம்மாநில காவல்துறையினருக்கு துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா பிறப்பித்த உத்தரவினால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் போலிசுடன் பேசுவது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவினால் பாஜக கட்சியைச் சேர்ந்த எம்.பி வருண் காந்தி உட்பட பல்வேறு தரப்பினரும் அந்த அதிகாரிக்கு கண்டனக் குரல் எழுப்பி வருகிறன்றனர்.
போராடி வரும் விவசாயிகளின் மண்டையை உடைக்கும் படி காவல்துறையினருக்கு உத்தரவிட்ட அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்!!!
Also Read | PMK: தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியின் ஏழாவது கட்டத்தை நீட்டிக்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR