Budget 2023: பல்வேறு துறைகளுக்கு அரசிடம் உள்ள டாப் 5 எதிர்பார்ப்புகள்

Budget 2023: அரசு நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கான செலவினங்களில் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மத்திய பட்ஜெட் 2023 குறித்து பொது மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 21, 2023, 08:11 PM IST
  • வருமான வரிச் சட்டத்தின் 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் விலக்குகளை அதிகரிக்குமாறு வரி வல்லுநர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
  • 2023 பட்ஜெட் உள் நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஆதரிக்க அரசாங்கம் புதிய முயற்சிகள் மற்றும் ஊக்கங்களை அறிமுகப்படுத்தலாம்.
Budget 2023: பல்வேறு துறைகளுக்கு அரசிடம் உள்ள டாப் 5 எதிர்பார்ப்புகள் title=

பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பொது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், அரசாங்கம் பல அனுகூலமான கொள்கைகளை வெளியிடக்கூடும் என நம்பப்படுகின்றது.  அரசு பெரும்பாலும் நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கான செலவினங்களில் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மத்திய பட்ஜெட் 2023 குறித்து பொது மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

வருமான வரி விதிகளில் விலக்கு

முந்தைய வருமான வரி முறையின் கீழ் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வருமான வரிச் சட்டத்தின் 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் விலக்குகளை அதிகரிக்குமாறு வரி வல்லுநர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். வல்லுநர்கள் மற்றும் தனிநபர்கள் வைக்கும் மற்ற கோரிக்கைகளில் வரி அடுக்குகளை புதுப்பித்தல் மற்றும் விருப்ப வருமான வரி முறையின் கீழ் வரி விகிதங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்.

உள் நாட்டு உற்பத்தித் துறையில் கவனம் 

2023 பட்ஜெட் உள் நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் அதன் பிரபலமான உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை புதிய தொழில்களுக்கு விரிவுபடுத்தலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | Budget 2023 Expectations: இந்த முறையில் 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்காது 

கிராமப்புற மற்றும் பொதுநலச் செலவுகள்

தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் தரவுகளின்படி, அரசாங்கங்கள் பொதுவாக கிராமப்புற மற்றும் நலன்புரிச் செலவினங்களுக்கு தங்கள் கவனத்தை மாற்றுகின்றன. இந்தியாவின் முந்தைய இரண்டு தேர்தலுக்கு முந்தைய பட்ஜெடுகளும் இதே போக்குகளைக் காட்டின. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன், கோல்ட்மேன் சாக்ஸ் ஆராய்ச்சியின்படி, மக்கள் நலன் மற்றும் கிராமப்புறச் செலவுகளுக்கு அதிக பணம் ஒதுக்கப்படும்.

நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம்

ஒவ்வொரு தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டிலும் உள்கட்டமைப்பு என்பது வரவிருக்கும் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் நிதித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும். FY24 இல் வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ள இந்த ஆண்டு இதில் அதிக ஒதுக்கீட்டை அறிவிக்க அரசாங்கம் முனைப்புடன் இருக்கலாம். ஏனெனில் உள்கட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் இயந்திரமாக செயல்படுவதுடன் இது அதிக வேலைகளையும் உருவாக்குகிறது.

பசுமை ஆற்றலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்

2070 ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கு நாடு உறுதியுடன் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஆதரிக்க அரசாங்கம் புதிய முயற்சிகள் மற்றும் ஊக்கங்களை அறிமுகப்படுத்தலாம். முன்முயற்சிக்கு அதிக தனியார் ஆதரவை ஊக்குவிக்கும் கொள்கைகளின் சில எடுத்துக்காட்டுகளாக அரசாங்கம் நிதி ஊக்கத்தொகைகள், அதிகரித்த நிதி மற்றும் வரி தள்ளுபடிகள் ஆகியவற்றையும் அறிவிக்கக்கூடும்.

மேலும் படிக்க | Budget 2023: எதிர்பார்க்கப்படும் 4 முக்கிய வரி சலுகைகள், அளிப்பாரா நிதி அமைச்சர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News