புதுடெல்லி (New Delhi) : பாங்க் ஆப் இந்தியா (Bank of India) மற்றும் பிற வங்கிகளை ₹1,400 கோடிக்கு மேல் மோசடி செய்ததற்காக பிரபல ஐஸ்கிரீம் பிராண்டான குவாலிட்டி லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக மத்திய புலனாய்வு கழகம் CBI வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லி உட்பட நான்கு மாநிலங்களில் உள்ள எட்டு இடங்களில் சோதனை நடத்தியது.
டெல்லியை தளமாகக் கொண்ட குவாலிட்டி ஐஸ்க்ரீம் லிமிடெட் நிறுவனத்தின் (Kwality Ice Cream) , டெல்லி, உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர், புலந்த்ஷஹர், ஹரியானாவின் பல்வால் மற்றும் ராஜஸ்தானின் அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
2010 ஆம் ஆண்டு முதல் குவாலிட்டி நிறுவனம் தங்களிடமிருந்து கடன் வாங்கியதாகவும், இதனால், தங்களுக்கு ₹1,400.62 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாங்க் ஆப் பரோடா மற்றும் 10 வங்கிகளின் கூட்டமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
பேங்க் ஆஃப் இந்தியா (BOI), கனரா வங்கி, BoB, ஆந்திர வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ (IDBI), செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி ஆகியவற்றை உள்ளடக்கிய, பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான கூட்டமைப்பு குவாலிட்டி ஐஸ்க்ரீம் நிறுவனம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. பொய்யான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் மூலம் வங்கி நிதிகளை ₹1,400.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான குச்வாலிட்டி ஐஸ்க்ரீம் டிசம்பர் 2018 முதல், திவால் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் கிட்டத்தட்ட 1,900 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR