புது தில்லி. கர்நாடகாவின் (Karnataka) காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் வீட்டிலும், மற்றும் வேறு 15 இடங்களிலும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI குழு சோதனை நடத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில், கர்நாடகா மற்றும் மும்பையில் உள்ள டி.கே.சிவகுமாரின் இருப்பிடங்களை சிபிஐ சோதனை செய்கிறது.
டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் எம்.பி. டி.கே.சுரேஷ் தொடர்பான பெங்களூரில் 15 கட்டிடங்களை சிபிஐ குழுக்கள் சோதனை செய்கின்றன என்று கூறப்படுகிறது. டோடலஹள்ளி, கனக்புரா மற்றும் சதாசிவ் நகரில் அமைந்துள்ள அவர்களின் பழைய வீடுகளிலும் சோதனை செய்யப்படுகின்ற
வருமான வரித் துறையில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்க துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் கிடைத்த சில முக்கியமான தகவல்களை ED சிபிஐக்கு வழங்கியது. அதன் அடிப்படையில், சிபிஐ இந்த சோதனையை நடத்துகிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | நீங்கள் பழைய நாணயம் சேமிப்பவரா.. அப்படியானால், லட்சாதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது..!!!
திங்கள்கிழமை காலை 6 மணி முதல் டி.கே.சிவ்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோருடன் தொடர்புடைய கட்டிடங்கள் குறித்து சி.பி.ஐ சார்பாக சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டையும் தவிர, இக்பால் உசேனின் தளங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன.
Karnataka: CBI raids underway at more than 15 premises of state Congress chief DK Shivakumar and his brother & MP DK Suresh, including the former's residence at Doddalahalli, Kanakapura and Sadashiva Nagar, in Bengaluru. More details awaited. pic.twitter.com/SPZ1i2sKo7
— ANI (@ANI) October 5, 2020
முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பழிவாங்கும் அரசியல் என்று குறிப்பிட்டார். பாஜக பழிவாங்கும் அரசியல் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
'பாஜக (BJP) எப்போதும் பழிவாங்கும் அரசியல் செய்கிறது. மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. இடைத்தேர்தலுக்கான எங்கள் பணிகளை பாதிக்கும் நோக்கில் டி.கே.சிவகுமாரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | Hathras வழக்கில் கலவரத்தை தூண்ட எதிர் கட்சிகள் முயற்சி: யோகி ஆதித்யநாத்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe