புது டெல்லி: கொரோனா (COVID-19) பெருந்தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஏராளாமானோர் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். தனியார் துறையில் வேலை செய்கின்ற ஒரு சிலர் தங்களின் வேலையை தக்க வைத்துக் கொண்டாலும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் சம்பளத்தை குறைத்து வழங்குகின்றது. இதனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பொருளாதார சிரமத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஒன்றிய அரசு "கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த பணியாளர்களின் பி.எப் (EPF) பங்களிப்பு தொகையை அடுத்த 2022 ஆம் ஆண்டு வரை அரசு செலுத்தும் என்று நிதியமைச்சர் (Union Finance Minister) நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman) தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், "இபி.எப்.ஓ வில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் வேலை இழந்தவர்களின் பி.எப் (EPFO) பங்களிப்புத் தொகை மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து அவர்களுக்கு ஒன்றிய அரசு செலுத்தும் என்றும் வேலை இழந்தவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படும் வரை இந்த பங்களிப்பு தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ALSO READ | பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
இது அதிகபட்சமாக அடுத்த ஆண்டு 2022 வரை வழங்கப்படும் எனவும் வேலையிழந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாவட்டத்தில் வேறோரு பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், அரசின் 16 வகையான தொழில் திட்டங்களின் மூலம் வேலையிழந்தவர்கள் வேலை வாய்ப்புகளை பெறலாம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் "2020ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்காக ரூ.60 ஆயிரம் கோடியினை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவை மேலும் 1 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ALSO READ | COVID: பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டங்கள்: நிர்மலா சீதாராமன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR