பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக மத்திய அமைச்சர் உமா பாரதியை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்திருந்தார். எனினும், இதுதொடர்பாக பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவரைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும் மத்திய குடிநீர், வடிகால்துறை அமைச்சருமான உமா பாரதி ‘எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.
BJP National President Shri @AmitShah has appointed Sushri @umasribharti as National Vice President of BJP : Shri @JPNadda pic.twitter.com/xe0ra16zxr
— BJP (@BJP4India) March 23, 2019
இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் ஆலோசனை குழு கூட்டத்திலும் அக்கட்சி தலைமையிடம் தனது கருத்தை உமா பாரதி வலியுறுத்தினார்.
இந்நிலையில் தற்போது உமா பாரதியை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா நியமனம் செய்துள்ளார். டெல்லியில் இன்றிரவு 46 பாஜக வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.பி.நட்டா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.