"உயர் தொழில்நுட்பக் கட்டளை மையம்" - ஆந்திராவில் துவங்கியது!

13 முக்கிய கிராமங்களுக்கு, கட்டளை கட்டுப்பாட்டு அறைகளுடன் நிகழ்நேரத்தில் இணைய வழிவகும் வகையில் இணைய இணைப்பு!

Last Updated : Nov 26, 2017, 04:53 PM IST
"உயர் தொழில்நுட்பக் கட்டளை மையம்" - ஆந்திராவில் துவங்கியது! title=

ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு இன்று (ஞாயிறு) ஆந்திரா தலைமை செயலகத்தின் முதல் தளத்தில், ரியல் டைம் கவர்னன்ஸ் கம்யூன் கட்டுப்பாட்டு மையத்தை (Real-time Governance Command Control Centre)  திறந்து வைத்தார்.

இந்ந உயர் தொழில்நுட்பக் கட்டளை கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு, அனைத்து அரசு அதிகாரிகளுடனும் வீடியோ கான்ப்ரசிங் மூலம் என்னேரத்திலும் தொடர்பு கொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் உரையாற்றிய சந்திரபாபு கூறியதாவது, மாநிலத்தில் உள்ள அனைத்து மேலதிக தகவல் மையங்களும் நிகழ்நேரத்தில் இந்த உயர் தொழில்நுட்ப கட்டளை கட்டுப்பாட்டு மையத்தால் ஒன்றிணைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் 13 முக்கிய கிராமங்களுக்கு, கட்டளை கட்டுப்பாட்டு அறைகளுடன் நிகழ்நேரத்தில் இணைய வழிவகும் வகையில் இணைய இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Trending News