ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
நீதிமன்றம் தீர்ப்பு மூலம் இந்திய அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. இதனால் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன் எனக்கூறி போராட்டத்தை கைவிட்டார் மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்! நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜக-வுக்கு எதிராக பலமான அணியை உருவாக்குவதில் மாநில கட்சிகள் தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. இந்த முயற்சிக்கு அடித்தளமாக கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி தனது பதவியேற்பு விழாவுக்கு பல மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தனது பிறந்த நாளான ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. அது தொடர்பாக கலந்தாலோசித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு ஆட்சி புரிந்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை எனவும், இதன் அதிருப்தி காரணமாக மத்திய அமைச்சரவையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் 2 பேரும் இன்று ராஜினாமா செய்வுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.