தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சித்திப்பெட் மாவாட்டம் கஜ்வெல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்!
வரவிருக்கும் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் 2018-ல், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் இருந்து போட்டியிடுகின்றார்.
Siddipet: #Telangana Chief Minister K Chandrashekhar Rao files nomination from Gajwel constituency. #TelanganaAssemblyElections2018 pic.twitter.com/OIe1sRA5tj
— ANI (@ANI) November 14, 2018
119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 11-ஆம் நாள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வந்த நிலையில் அங்கு முதல்வராக பதவி வகித்து வந்த சந்திரசேகர ராவ் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் முன்னரே சட்டப்பேரவையை கலைத்தார். இதைனையடுத்து வரும் டிசம்பர் 7-ஆம் நாள் இம்மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
தேர்தல் விவரம்...
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று துவங்கி வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
- நவம்பர் 20-ஆம் நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
- நவம்பர் 22-ஆம் நாள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசிநாள்.
- டிசம்பர் 7-ஆம் நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
- டிசம்பர் 11-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் விவரம்...
- மொத்த வாக்காளர்கள் - 2.73 கோடி
- ஆண் வாக்காளர்கள் - 1.38 கோடி
- பெண் வாக்காளர்கள் - 1.35 கோடி
- 3-ஆம் பாலினத்தவர் - 2663