அரசு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை (ஜூலை 10) வெளியிட்டன. 50வது நாளான இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 ஆகவும் குறைக்கப்பட்டது. அதேபோல் மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு சில மாநிலங்களும் தங்களின் வாட் வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளித்தன.
மலிவான பெட்ரோல் எந்த மாநிலத்தில் விற்பனை?
நாடு முழுவதும் பணவீக்கம் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில், போர்ட் பிளேயரில் மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படுகிறது. போர்ட் பிளேரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.10க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.79.74க்கும் விற்பனை செய்யப்படுகிறது. போர்ட் பிளேர் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் ஆகும். எனவே அந்த மாநிலத்திற்கு சென்றால் நீங்கள் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை பெறலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு
உங்கள் நகரத்தின் இன்றைய விலை நிலவரம்
- டெல்லி பெட்ரோல் ரூ. 96.72 மற்றும் டீசல் ரூ. 89.62
- மும்பை பெட்ரோல் ரூ. 111.35 மற்றும் டீசல் ரூ. 97.28
- சென்னை பெட்ரோல் ரூ. 102.63 மற்றும் டீசல் ரூ. 94.24
- கொல்கத்தா பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 106.03 மற்றும் டீசல் ரூ. 94.24
- நொய்டா பெட்ரோல் ரூ. 96.57 மற்றும் டீசல் ரூ. 89.96
- லக்னோ பெட்ரோல் ரூ. 96.57 மற்றும் டீசல் ரூ. 89.96
- திருவனந்தபுரம் பெட்ரோல் ரூ.107.71 மற்றும் டீசல் ரூ.96.52
- பெங்களூருவில் பெட்ரோல் ரூ.101.94 மற்றும் டீசல் ரூ. 87.89
- சண்டிகரில் பெட்ரோல் ரூ.96.20, டீசல் ரூ.84.26
- ஐதராபாத்தில் ரூ .669. டீசல் ரூ.109 விலை ஆகும்.
தினமும் காலை 6 மணிக்கு புதிய கட்டணங்கள் வெளியிடப்படுகின்றன
பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலைகள் தினசரி 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். உங்கள் நகரத்தின் விலைகளை வீட்டில் அமர்ந்த படி தெரிந்து கொள்ளலாம். இதற்கு உங்கள் மொபைலில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் ஆர்எஸ்பியை 9224992249 என்ற எண்ணுக்கும், பிபிசிஎல் நுகர்வோர்கள் ஆர்எஸ்பியை 9223112222 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம். அதே நேரத்தில், ஹெச்பிசிஎல் நுகர்வோர் HPPrice ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR