ஜெய்பூர்: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவீண் தொகாடியா கடந்த 2015-ஆம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ராஜஸ்தான் காவல்துறையினர் நேற்று அவரது வீட்டிற்கு சென்று கைது செய்ய முற்பட்டனர், ஆனால் அவர் தன் வீட்டில் இல்லாததால் அங்கிருந்து திரும்பினர்.
ஆனால் அந்த அமைப்பின் தொண்டர்கள், தொகாடியாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என சோலா காவல் நிலையத்தினை முற்றுகையிட்டனர். பின்னர் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் அவரை உடனடியாக கண்டறிய விரைந்தனர்.
பின்னர் காணாமல் போன தொகாடியாவை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. எனினும் பயனில்லை. இந்நிலையில் கிழக்கு அகமதாபாத் நகரில் கோடார்பூர் பகுதி அருகே பூங்கா ஒன்றில் தொகாடியா மயக்கமடைந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
குறைந்த சர்க்கரை அளவால் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மயக்கமடைந்துள்ளார் என சந்திரமணி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர் முழுவதும் நலம் பெற்றவுடன் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
I am being targeted for a decade old case, there is an attempt to suppress my voice. Rajasthan Police team came to arrest me. Someone told me plan was being made to kill me in an encounter:Pravin Togadia pic.twitter.com/omxUdvS6B9
— ANI (@ANI) January 16, 2018
இதுதொடர்பாக பிரவீன் தொக்காடியா கூறுகையில்...
ராஜஸ்தான், குஜராத் காவல்துறையினர் தன்னை மிரட்டியதாகவம், அவர்களின் பிடியில் சிக்காமல் இருக்கவே தனது கைப்பேசியினை அனைத்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு என் குரலை ஒடுக்க பார்க்கிறது, பொய்யான வழக்கில் எனக்கு பிறப்பிக்கப்பட்ட பிரபித்து என்னை கொல்ல பார்கிரார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.