புதுடெல்லி: சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மூலம் (MoHFW) செவ்வாய்க்கிழமை (மார்ச் 30, 2021) காலை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 56,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்பட்டுள்ள திடீர் ஏற்றம் இப்போது நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 5.40 லட்சமாக உயர்த்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 37,028 குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் COVID-19 மீட்பு விகிதம் 94.19% ஆக மேம்பட்டது.
இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் கேஸ்லோட் (Caseload) இப்போது 1,20,95,855 ஆக உயர்ந்துள்ளது, இதில் 1,13,93,021 பேர் குணமடைந்துள்ளனர். 1,62,114 பேர் வைரஸின் பிடியில் சிக்கி இறந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக, இந்தியாவில் தினமும் 55,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய எட்டு மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று கூறியது.
இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர அதிகரிப்பைக் கண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் பஞ்சாப் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகும்.
ALSO READ: இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது
திடீரென அதிகரிக்கும் தொற்றின் (Coronavirus) காரணமாக, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மார்ச் 27 அன்று 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒரு உயர் மட்ட சந்திப்பை நடத்தினார். MoHFW இன் கூற்றுப்படி, 2020 மே மாதத்திற்குப் பிறகு, தற்போது நாடு அதிகப்படியான புதிய தொற்றுகளையும் இறப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது என மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அதிக தீவிரம் கொண்ட 46 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன.
COVID-19 தொற்றுநோயை திறம்பட கட்டுப்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பின்வரும் ஐந்து அம்ச செயலுத்தி வகுக்கப்பட்டது:
1. அதிகரித்த சோதனை மற்றும் தடுப்பூசி
2. பயனுள்ள தடமறிதல்
3. உடனடி தனிமைப்படுத்தல்
4. திறமையான மருத்துவ சிகிச்சை, மற்றும்
5. COVID தொற்றுநோய்க்கு ஏற்ற நடவடிக்கைகளை பின்பற்றுதல்.
இதற்கிடையில், COVID-19 தடுப்பூசி (COVID-19 Vaccine) போடப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 6,11,13,354 ஆக உயர்ந்துள்ளது, இதில் 5,22,11,398 பேர் முதல் டோஸையும் 89,01,956 பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் போட்டுக்கொண்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய தடுப்பூசி செயல்முறையாக இருக்கும் இந்தியாவின் COVID-19 தடுப்பூசி செயல்முறை ஜனவரி 16, 2021 அன்று துவக்கப்பட்டது.
ALSO READ: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் -5 தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைக்கலாம்: Dr Reddy's
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR