COVID UPDATE: கொரோனா வைரஸ் நாட்டில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினசரி அடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 955 பேர் இறந்துள்ளனர்.
இதையடுத்து, நாட்டின் COVID-19 பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4,85,350 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,02,005 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கோவிட் பாதிப்பின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது எனசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ஜூலை 4, 2021) தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டவர்களின் தரவுகளின் அடிப்படையில் தேசிய வாராந்திர பாதிப்பு விகிதம் தற்போது 2.44 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 2.34 சதவீதமாகவும் உள்ளது.
India reports 43,071 new #COVID19 cases, 52,299 recoveries, and 955 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
Total cases: 3,05,45,433
Total recoveries: 2,96,58,078
Active cases: 4,85,350
Death toll: 4,02,005Total Vaccination: 35,12,21,306 pic.twitter.com/ZcXWlo8Zzh
— ANI (@ANI) July 4, 2021
இருந்தாலும், நேற்று 955 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, ஒரு நாள் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 52,000 க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம், நாட்டின் COVID-19 மொத்த எண்ணிக்கை 4,85,350 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,02,005 ஆகவும், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,58,078 ஆகவும் உள்ளது. இதுவரை நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,12,21,306 ஆக உயர்ந்துள்ளது.
Also Read | ICMR: டெல்டா வைரஸில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு உண்டு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR