டெல்லி: டெல்லி, நொய்டா மற்றும் NCR சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை ஏழு மணியளவில் சுமார் 48 விநாடிகளுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆடின. பொதுமக்கள் கட்டங்களில் இருந்து வீதிகளுக்கு வந்தனர்.
டெல்லிக்கு மிக அருகில் உள்ள அரியானா மாநிலத்தின் குர்கானில், 63 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்தது.
கடந்த சில மாதங்களாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 13க்கும் அதிகமான முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி என்.சி.ஆர் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து ஏற்படும் குறைந்த மற்றும் நடுத்தர தீவிர பூகம்பங்கள் அனைவருக்கும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் டெல்லியில் மிகப்பெரிய பூகம்பம் ஏறடலாம் என்று ஐ.ஐ.டி தன்பாத்தின் பயன்பாட்டு புவி இயற்பியல் மற்றும் நில அதிர்வுத் துறையின் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Also Read | China: வெள்ளதால் சீரழியும் சீனாவில் IV நிலை அவசரகால எச்சரிக்கை
சிறிய அளவில் தொடர்ந்து ஏற்படும் அதிர்வுகள் (tremors) ஒரு பெரிய பூகம்பம் ஏற்படலாம் என்பதற்கான முன்னெச்சரிக்கை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.
பூகம்பம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், எப்போது எங்கே நில அதிர்வு ஏற்படலாம் என்பதை நிபுணர்களாலும் கணிக்க முடியாது என்றாலும், டெல்லியைச் சுற்றி தொடர்ந்து பூமி அதிர்வுகள் அவ்வப்போது ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம் என்பதை, பூகம்பம், பூமியதிர்ச்சி, நில அதிர்வு என பல பெயர்களில் குறிப்பிடுகிறோம். இந்த earthquake எப்போது ஏற்படும்? பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகும்போது, அழுத்தத்தினால் சக்தி வெளியேற்றப்படும். அப்போது, தளத்தட்டுகள் (Plates) நகர்கின்றன. இந்த நகர்வினால் ஏற்படும் அதிர்வே நில நடுக்கம் ஆகும்.
Also Read | விளையாட்டு வீராங்கனை கரானோவின் வைரலாகும் topless photos
இந்த அதிர்வுகளானது, seismometer எனப்படும் நிலநடுக்கமானியினால் அளவிடப்படுகிறது. அது ரிக்டர் அளவை மூலம் குறிக்கப்படுகிறது. 3 ரிக்டர் அளவுக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமே. ஆனால் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமானது, பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.
Lithosphere எனப்படும் பூமியின் மேற்பரப்பு பாளங்களாக அமைந்துள்ளன. நகரும் பிளேட்டுகளாக உள்ள இவை, நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக விரவியுள்ளன. இவற்றில் ஏழு பிளேட்டுகள் அளவில் மிகவும் பெரியவை. இந்த ஏழு பிளேட்டுகளில் தான் ஐந்து கண்டங்களும், சமுத்திரப் பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
இதைத்தவிர சுமார் ஒரு டஜன் சிறிய அளவிலான பிளேட்டுகள் உள்ளன. இந்தப் பிளேட்டுகள் ஆண்டொன்றுக்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகரக்கூடியவை. இந்த பிளேட்களின் லேசான உராய்வு, மாபெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.
இந்த நிலையில், இன்று காலை ஜப்பானிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ''ஜப்பானில் வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோ நகரிலிருந்து 291 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது'' என்று அந்த அறிக்கை கூறுகிறது.