சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய்?

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

Last Updated : Feb 4, 2019, 06:24 PM IST

Trending Photos

சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய்? title=

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் சரோகவர் அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள, பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண, நாள் தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலையை சுற்றி ஏராளான இயற்கை, செயற்கை நீர் நிலைகள் உள்ளன. சர்தார் சரோவர் அணை நிரம்பினால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இந்த நீர் நிலைகளில் சேகரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ஜனவரி 27ம் தேதி வரை ரூ.18.47 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. படேல் சிலை மூலம் அரசுக்கான வருவாய் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending News