TN Latest News Updates: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து பேசியதற்கு அனுமதியில்லை என கூறியதால், பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் 85ஆவது அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு (AIPOC) இன்று தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சட்டப்பேரவை தலைவர்கள், துணை தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பீகார் சட்டப்பேரவையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தொடங்கிவைத்தார்.
85ஆவது சபாநாயகர்கள் மாநாடு: யார் யார் பங்கேற்பு?
அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு நிறைவுயொட்டி, அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்துவதில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பங்களிப்பு என்ற தலைப்பிலான அமர்வுகளில் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க | அனல் பறந்த விஜய் பேச்சு!! பரந்தூரில் அவர் பேசிய விஷயங்கள் என்னென்ன? ஹைலைட்ஸ் இதோ..
பாட்னாவில் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி, பீகார் சட்டப்பேரவை தலைவர் நந்த் கிஷோர் யாதவ், சட்டமன்ற துணை தலைவர் நரேந்திர நாராயண் யாதவ், பீகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை தலைவர்கள், பீகார் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் மற்றும் பிற தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்தனர்.
85ஆவது சபாநாயகர்கள் மாநாடு: 1921ஆம் ஆண்டில் இருந்து...
இந்த அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு (AIPOC) முதல் முறையாக 1921ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்றது. தற்போது நடைபெறுவது 85வது AIPOC ஆகும். கடந்தாண்டு 84வது AIPOC ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. முதல் AIPOC மாநாடு நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டு நவம்பரில் 82ஆவது AIPOC மாநாடு, முதல் மாநாட்டை போலவே மீண்டும் சிம்லாவில் நடைபெற்றது.
85ஆவது சபாநாயகர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு - என்ன காரணம்?
இந்நிலையில், இன்றைய மாநாட்டு அமர்வில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் துணை தலைவர் கு. பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அப்போது அப்பாவு மாநாட்டில் உரையாற்றுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பதாக பேசியபோது, உடனே மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டார். தொடர்ந்து, ஆளுநர் குறித்து இங்கு பேச அனுமதியில்லை என கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் குறித்து அப்பாவு பேசியது பதிவாகாது என மாநிலங்களவை துணைத் தலைவர் கூறியதால் அப்பாவு வெளிநடப்பு செய்துள்ளார். மேலும், இங்கு ஆளுநர் குறித்து பேச முடியாவிட்டால் வேறு எங்கு பேசுவது என தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! அதிகபட்சம் ரூ. 25,000.. -முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ