பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பிற்கு போர் ஜெட் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை வழங்கியதற்காக HAL ஊழியர் கைது செய்யப்பட்டார்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக் ஷிர்சாத் (Deepak Shirsath) என்ற இந்த நபர் இந்திய போர் விமானங்கள் மற்றும் அவற்றின்தொழில்நுட்பம் பற்றிய ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகம் மூலம் வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) ஏஜென்சிக்கு போர் விமானங்களின் ரகசிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஊழியரை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை இன்று கைது செய்தது.
"ISI உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த அந்த நபர் குறித்து மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவின் (ஏ.டி.எஸ்) நாசிக் பிரிவு நம்பகமான உளவுத் தகவல் கிடைத்தது. தீபக் ஷிர்சாத் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், இந்திய போர் விமானங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பம் பற்றிய ரகசிய தகவல்களை வழங்கினார்” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
நாசிக் அருகே ஓசரில் உள்ள HAL விமான உற்பத்தி பிரிவு, விமானநிலையம் மற்றும் உற்பத்தி பிரிவுக்குள் தடைசெய்யப்பட்ட பகுதிகள் தொடர்பான தகவல்களையும், அவர் பகிர்ந்து கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
உதவி மேற்பார்வையாளராக பணிபுரிந்த, தீபக் ஷிர்ஷத் என்ற 41 வயது நபர் மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | வீடு வாங்க இருப்பவர்களுக்கு Good News... வருகிறது அதிரடி Festival Home Loan offer..!!!
அவரிடமிருந்து மூன்று மொபைல் தொலைபேசிகள் மற்றும் ஐந்து சிம் கார்டுகள் மற்றும் இரண்டு மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
HAL விமானப் பிரிவு நாசிக், 24 கி.மீ தொலைவிலும், மும்பையிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் உள்ள ஓஜாரில் அமைந்துள்ளது.
MiG-21FL விமானம் மற்றும் K-13 ஏவுகணைகளின் உரிமத் தயாரிப்பிற்காக 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பிரிவு, MiG-21M, MiG-21 BIS, MiG-27 M மற்றும் அதிநவீன Su-30 MKI போர் விமானம் ஆகியவற்றையும் தயாரித்துள்ளது.
இந்த பிரிவு MiG ரக விமானங்களின் பழுதுபார்ப்பு மற்றும் Su-30 MKI விமானங்களின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்கிறது.
ALSO READ | மாறியது NPS விதிகள்.. ஓய்வூதியத்துடன் கோடீஸ்வராகும் வாய்ப்பை கொடுக்கும் NPS ..!!!