குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலை 20 நாட்களாக காணவில்லை என்று அவரின் மனைவி புகார் அளித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் குஜராத் முழுக்க பட்டேல் ஜாதி மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இதில் பெரும்பாலான இடங்களில் போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்
இந்த போராட்டத்திற்கு பின் இவர் பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார். தனி நபராக செயலாற்றி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த போராட்டத்தில் விஸ்நகரில் இருந்த பாஜக கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் அவரின் சிறை தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு 20 நாட்களாக இவரை காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இவர் எங்கே இருக்கிறார் என்று இவரின் குடும்பத்திற்கே கூட தெரியவில்லை. இவரின் மனைவி இவரை தீவிரமாக தேடி வருகிறார்.