ஸ்ரீநகர் (Srinagar): வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சாத்னா பாஸில் (Sadhna Pass) ஒரு போதை மருந்து கடத்தலுடன் கூடிய பயங்கரவாத நடவடிக்கையை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து முறியடித்ததுடன் இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ ப்ரவுன் சுகர், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் இரண்டு வாகனங்களை இந்த குழு கைப்பற்றியது.
"குப்வாராவின் சாத்னா பாஸில் நேற்று இரவு பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. போதை மருந்து கடத்தல் தொடர்பான உளவு தகவலின் அடிப்படையில், டிடெக்டர்கள் மற்றும் ஸ்கேனர்களின் உதவியுடன் இராணுவ நாய்கள், மறைத்து வைக்கப்பட்ட போத்கை மருந்து பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடித்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1 ஏ.கே -56, வெடிமருந்துகள், 2 கைத்துப்பாக்கிகள், 20 கையெறி குண்டுகள் மற்றும் சுமார் 10 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என இந்திய இராணுவத்தின் அறிக்க்கை கூறுகிறது.
ALSO READ | Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன..!!!
குப்வாரா பகுதியின் SSP ஸ்ரீராம் டிங்கர் கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட உளவு தகவலின் அடிப்படையில், சாத்னா பாஸில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவம், 7 RR மற்றும் குப்வாரா போலீசார் இணைந்து மிகப்பெரிய சதியை முறியடித்தனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாங்தாரில் வசிக்கும் பஷீர் அஹ்மத் ஷீக் மற்றும் அப்துல் அமீர் ஷேக் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் ரூ .50 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட 10 கிலோ போதைப்பொருள் அவர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளது” என்றார்.
1 ஏ.கே .47 துப்பாக்கி, 2 துப்பாக்கிகள், 4 பிஸ்டல் இதழ்கள், 76 ஏ.கே .47 துபாக்கிகள், 90 பிஸ்டல் மற்றும் 20 வகையான கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
ALSO READ | கார்கில் வெற்றி தினம் 2020: கார்கில் மூலம் கல்வான் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன
இருவருமே மூன்றாவது நபருடன் தொடர்பில் இருந்தனர் என்றும், அந்த மூன்றாவது நபர், இரண்டாவது வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார் எனவும் காவல் துறை தெரிவித்தது. இராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூட்டுக் குழு இணைந்து இவர்களின் சதி நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் கைது நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.