கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுக்கு மத்தியில், இந்திய ரயில்வே (Indian Railways) பல சிறப்பு ரயில்களைத் துவக்கியுள்ளது. ஆகஸ்ட் 12-ற்குப் பிறகு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். ஆனால் இதற்கு முன்னர், இந்தியன் ரயில்வே, பல ரயில்களின் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. ஆகையால் பயணிக்கும் முன்னர் எந்தெந்த ரயில்களின் நேரம் மற்றும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். ரயில்வே வாரியத்தின் துணை இயக்குனர் ராஜேஷ் குமார், ரயில்களின் வழித் தட மாற்றம் குறித்த தகவல்களை அனைத்து ஜோனல் தலைமையகங்களுக்கும் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
வாரணாசியிலிருந்து ஜம்முதாவி செல்லும் பேகம்புரா எக்ஸ்பிரசின் வழித்தடம் மாறியுள்ளது. இந்த ரயில் இப்போது சுல்தான்பூருக்கு பதிலாக வாரணாசி-ப்ரதாப்கட்-ராய்பரேலி வழியாகச் செல்லும். ஹாவ்டா-டெஹ்ராடூன் எக்ஸ்பிரசின் வழித்தடத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பரேலி-ப்ரயாக்ராஜ் சங்கம் எக்ஸ்பிரஸ், ராய்பரேலி-ஊஞ்சாஹார்-பாபாமாவ் வழியாகச் செல்லும்.
ALSO READ: இன்று முதல் விவசாயிகளுக்கான கிஸான் ரயில் தொடக்கம், அரசாங்கத்தின் திட்டம் என்ன?
இவற்றைத் தவிர இன்னும் சில தென்னிந்திய ரயில்களின் நேரமும் வழித்தடங்களும் கூட மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வரவில்லை.
இதற்கிடையே இன்று முதல், விவசாயிகளுக்கான சிறப்பு ரயில் துவங்குகிறது. இன்று விவசாயிகள் சிறப்பு பார்சல் ரயில் (Kisan Special Parcel Train) துவக்கப்பட்டது. இந்த ரயிலின் உதவியால் விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூ வகைகள், மீன் வகைகள் ஆகியவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகக் கொண்டு செல்லலாம். முதல் விவசாயிகள் சிறப்பு பார்சல் ரயில், மகாராஷ்டிராவின் நாசிக்கின் தேவ்லாலியிலிருந்து இன்று புறப்பட்டு பீஹாரின் தானாபூரைச் சென்றடையும்.
ALSO READ: Kisan Rail: விவசாயிகளுக்கான முதல் AC சரக்கு ரயில் சேவை ஆகஸ்ட் 7 தொடங்குகிறது