JEE Main Exam News: இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததால், கொரோனா ஜே.இ.இ மெயின் தேர்வுகள் (ஏப்ரல் அமர்வு) ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. JEE மெயின் தேர்வுகளின் 3, 4 ஆம் கட்ட தேர்வுகள் ஜூலை 20-25 மற்றும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என அறிவிப்பு.
பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் 2021 தோ்வு இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மார்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது. ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த மெயின் தேர்வு மே 24 முதல் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ALSO READ | நர்சிங் படிப்பிற்கும் NEET தேர்வா.. தேசிய தேர்வு முகமை கூறுவது என்ன?
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு (JEE Main (April) exam date) ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
அதாவது ஏப்ரல் மற்றும் மே அமர்வுகளுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். ஜே.இ.இ மெயின் தேர்வின் மூன்றாம் கட்ட (ஏப்ரல்) தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என்றும், நான்காம் கட்ட (மே) தேர்வு (JEE Main (May) exam date) ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். எந்தவொரு மாணவர்களும் இதற்கு முன்னர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை முதல் கட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR