கார்கில் நினைவு நாள்: இன்று, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 23 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1999 ஜூலை 26ம் நாளன்று, காஷ்மீரில் பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இமயமலையில் உயர்ந்த உயரத்தில் அமைந்திருந்த பல மலைகளை இந்திய வீரர்கள் மீண்டும் கைப்பற்றினர். இந்த நாள் நமது வீரர்களின் வெற்றி மற்றும் தியாகத்தை கொண்டாடுகிறது.இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான போர்களில் ஒன்றான கார்கில் போர், 1999 ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை ஜம்மு காஷ்மீரின் கார்கில்-திராஸ் செக்டார் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) ஒட்டிய சில பகுதிகளை பாகிஸ்தான் துருப்புக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த போது நடத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மூன்று மாத கால கார்கில் போரை, இரு நாட்டு மக்களும் என்றென்றும் மறக்கமுடியாதபடி, மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக, இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய்யை தொடங்கியது.
கார்கில் போர்
ஊடுருவல்காரர்கள் முக்கியமான இடங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர், அது அவர்களுக்கு உயர் அளவிலான போரில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலனளித்தது. இருந்தபோதிலும், இந்திய இராணுவம் உள்ளூர் கால்நடை மேய்ப்பாளர்களிடம் இருந்து உளவுத் தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தான் ராணுவத்தினரின் நிலைகளைக் கண்டறிந்தது.
இறுதியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தாலும், இந்த நீண்ட போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களில் தியாகத்திற்குமரியாதை செலுத்துவதற்காக இந்த நாள் கார்கில் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கார்கில் நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.
On Kargil Vijay Diwas, India salutes the bravery, courage and sacrifice of our armed forces. They fought valiantly in extremely harsh conditions to defend our motherland. Their act of valour & indomitable spirit will remain etched forever as a defining moment in India’s history. pic.twitter.com/XSE24gM20r
— Rajnath Singh (@rajnathsingh) July 26, 2022
கார்கில் நினைவு நாளான இன்று, நமது ஆயுதப் படைகளின் வீரம், தைரியம் மற்றும் தியாகத்திற்கு இந்தியா வணக்கம் செலுத்துகிறது. நமது தாய்நாட்டைக் காக்க அவர்கள் மிகவும் கடுமையான சூழ்நிலைகளில் வீரத்துடன் போராடினர். அவர்களின் வீரம் மற்றும் துணிவான மனப்பான்மை இந்திய வரலாற்றில் ஒரு வரையறுக்கப்பட்ட தருணமாக என்றென்றும் பொறிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீஃப் வடக்கு கமாண்ட், லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி, அவர்களும் கார்கில் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.
The entire nation is bowing down to the valour and victory of the Indian Army. Through #KargilVijayDiwas we remember their sacrifices with a sense of gratitude: General Officer Commanding-in-Chief (GOC-in-C) Northern Command, Lt General Upendra Dwivedi in Drass, Kargil pic.twitter.com/6tvCuDrkI8
— ANI (@ANI) July 26, 2022
இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் வெற்றிக்கு ஒட்டுமொத்த தேசமும் தலை வணங்குகிறது. #KargilVijayDiwas மூலம் அவர்களின் தியாகங்களை நன்றி உணர்வுடன் நினைவுகூர்கிறோம் என்று லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | உங்கள் வீட்டு நாயை பராமரிக்க காவலர் வேண்டுமா ? ஆர்டர்லி முறைக்கு நீதிபதி சரமாரிக் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ