கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளதை அடுத்து கர்நாடாகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் இயக்கப்படுகிறது!
கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. எனவே, கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 368-ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவில் காஸர்காட் மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் பருவமழை தாக்கம் குறைந்துள்ள நிலையில் கேரளாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளது. எனினும் 10 மாவட்டங்களில் Orange Alert செயல்பாட்டிலேயே உள்ளது.
தற்போது Red Alert திரும்பப்பெறப் பட்டுள்ளதை அடுத்து கர்நாடாகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் இன்று மாலை முதல் இயக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேரளாவின் எர்ணாகுளம், கோட்டையம், திருசூர், பால்கட், கோழிகோடு, கன்னூர் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி முதல் பேருந்து சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.