குஜராத்தில் சூரத் மற்றும் சவுராஷ்டிரா இடையேயான 'ரோ- பேக்ஸ் படகு சேவைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதில் மாநில முதல்வர் விஜய் ரூபானியும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) , “இன்று கோகாவுக்கும் ஹசிராவுக்கும் இடையில் ரோபாக்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம், சவுராஷ்டிரா மற்றும் சூரத் ஆகிய இரு பகுதி மக்களின் பல ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது. பல ஆண்டுகளாக மக்கள் காத்திருப்பு முடிந்தது.
குஜராத்தின் (Gujarat) ஹசிரா மற்றும் கோகா இடையேயான ரோ-பாக்ஸ் படகு சேவை ( Ro-Pax ferry service) மூலம் இந்த இரு இடங்களுக்கிடையில் 370 கி.மீ என்ற அளவில் இருந்த சாலை தூரத்தை கடல் வழியாக 60 கி.மீ ஆக குறைக்கும்.
ரோ-பேக்ஸ் படகில் ஒரே நேரத்தில் 550 பயணிகள், 30 லாரிகள், ஏழு சிறிய லாரிகள் மற்றும் 100 இருசக்கர வாகனங்கள் வரை செல்ல முடியும். இது அனைத்து வானிலையிலும் இயங்கும் சேவையாக இருக்கும், இது வானிலை மோசமாக இருந்தாலும் மற்றும் அலைகள் உயரமாக வீசினாலும், அனைத்து காலங்களிலும் 12 மாதங்களும் செயல்படும்.
ALSO READ | இந்தியாவில் கேன்ஸர் மருந்துகள் விலை 90% குறைந்ததில் நோயாளிகளுக்கு ₹984 கோடி சேமிப்பு
இந்த படகு சேவை தொடங்கிய பின்னர், மக்கள் சவுராஷ்டிராவின் பாவ்நகரின் கோகா மற்றும் சூரத்தின் ஹசிரா வரைல் செல்ல கடல் வழியைப் பயன்படுத்த முடியும். கோகா மற்றும் ஹசிரா இடையேயான தூரம் சாலை வழியாக 375 கி.மீ. ஆனால் இந்த சேவை தொடங்கிய பின்னர், இந்த தூரம் 90 கி.மீ. ஆக குறைந்து விட்டது
இந்த தூரத்தை சாலை வழியே கடக்க 10 முதல் 12 மணிநேரம் ஆகும். இப்போது அந்த கடல் பயணத்தில் 3-4 மணி நேரம் தான் ஆகும். இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், செலவுகளும் குறையும்.
இந்த திட்டத்திற்கான பணியாற்றி அனைத்து ஊழியர்களுக்கும் அனைத்து பொறியியலாளர்களுக்கும் தான் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, "நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு மற்ற நாடுகளை விட இன்றும் நம் நாட்டில் அதிக செலவு உள்ளது" என்று கூறினார். நீர் போக்குவரத்து மூலம் இந்த செலவுகளை குறைக்க முடியும். ஆகவே, அரசு இந்த திசையில் மேலும் திட்டங்களை கொண்டு வரும் என்றார்.
தளவாடச் செலவுகளைக் குறைக்க, நாடு இப்போது மல்டிமாடல் இணைப்பு என்பதை நோக்கிய நடவடிக்கையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றார். சாலை, ரயில், விமானம் மற்றும் கப்பல் உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தவும், அதில் உள்ள தடைகளை அகற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ALSO READ | COVID-19 தடுப்பூசி பெற இந்தியர்கள் 2022 வரை காத்திருக்க வேண்டும்: AIIMS இயக்குனர்
பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் கப்பல் அமைச்சகத்தின் பெயர் மாற்றுவதாக அறிவித்தார். கப்பல் அமைச்சகம் இனி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR