Tamil Nadu News Latest Updates: முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் இன்று (நவ. 4) பல நலத்திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டன. அதற்காக இன்று அங்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் ஜெகநாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் 'Co-working Space’ மற்றும் மாணவர்களுக்கான ‘கல்வி மையம்’ என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய "முதல்வர் படைப்பகம்" ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பெரியார் நகர் 4ஆவது தெருவில் உள்ள பள்ளி மைதானத்தில், அனிதா அகாடமி மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 மின்மாற்றி தடுப்புகள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, 80.90 லட்சம் ரூபாய் செலவில் 3 பல்நோக்கு மையக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் உடற்பயிற்சி கூடம், 38.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஜி.கே.எம். காலனியில் குளம் சீரமைக்கப்படும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடரும் சட்ட போராட்டம்
இதை தொடர்ந்து, கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,"எவ்வளவு நெருக்கடியான வேலை இருந்தாலும் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. அதில் கலந்து கொள்வது கூடுதல் உத்வேகத்தை கொடுக்கிறது.
மேலும் படிக்க | அமரன் படம் வெறுப்பை விதைக்கும் ஒரு அரசியல் அஜெண்டா - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு!
சகோதரி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் எல்லோருக்கும் தெரியும். ஒடுக்கப்பட்டோரின் மருத்துவத் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் இன்னும் நடத்தி கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் எதையும் செய்யவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது எந்த கட்சியாக இருந்தாலும் நாங்கள் செய்யும் திட்டங்களை பார்க்க வேண்டும். இந்த மூன்றரை ஆண்டுக்குள் தேர்தல் நேரத்தில் எனது வாக்குறுதிகளை சொன்னமோ அதை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின்
மீதமுள்ள ஒன்று இரண்டு திட்டங்களை கூட நிச்சயமாக வரக்கூடிய காலங்களில் உறுதியாக விரைவாக நிறைவேற்றுவோம். இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் தொலைநோக்கு திட்டங்களைக் செய்யக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.
புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்கிறேன் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக சாதனைகளை பார்க்க வேண்டும். வாழ்க வசவாளர்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றார். அதாவது, கடந்த சில நாள்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிலும், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அந்த வகையில், விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டு பேசி உள்ளார்.
மேலும் படிக்க | மத்திய அரசை நேரடியாக எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக வெற்றிக் கழகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ