சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், லாலு மற்றும் காங்கிரஸ் உடனான மகா கூட்டணியை உடைத்துவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்து உள்ளார். இதனால் உள்கட்சி விரிசலும் உள்ளது.
இப்போது மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதும், ஏமாற்றத்தில் முடிந்தது.
ஐக்கிய ஜனதா தளத்தினரை பதவியேற்பு விழாவிற்கு கூட அழைக்கவில்லை. யார் ஒருவர் தன்னுடைய சொந்த மக்களைவிட்டு விலகுகிறாரோ அவரை மற்றவர்கள் ஏற்கவே மாட்டார்கள். இதுதான் நிதிஷ் குமாரின் விதி என கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவ்.