"வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" -ராகுல் காந்தி

Agnipath Protest: "ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது. வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் பிரதமர் திரும்பப் பெற வேண்டும்" என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 18, 2022, 03:53 PM IST
  • விவசாய சட்டத்தை திரும்பப் பெறுவது போல், அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்.
  • "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" மதிப்புகளை மத்திய அரசாங்கம் அவமதித்து வருகிறது.
  • 3 ஆண்டுகளாக ஆள்சேர்ப்பு நடக்கவில்லை. இளைஞர்கள் ஏமாற்றம் மற்றும் விரக்தியில் உள்ளனர்.
"வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" -ராகுல் காந்தி  title=

புதுடெல்லி: அக்னிபாத் திட்டம் மத்திய அசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் தற்போது அரசியலும் சூடுபிடித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை குறிவைத்து, "விவசாய சட்டத்தை திரும்பப் பெறுவது போல், அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார். 

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" மதிப்புகளை மத்திய அரசாங்கம் அவமதித்து வருகிறது. நான் முன்பே கூறியிருந்தேன் "கறுப்பு வேளாண் சட்டத்தை" பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று, அதே போல இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, 'அக்னிபாத்' திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது ட்வீட் மூலம், ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு அவமதித்துள்ளதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் படிக்க: அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு... இளைஞர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஆறுதல் பரிசு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், "கிராமப்புற இளைஞர்கள் ராணுவ ஆட்சேர்ப்புக்குத் தயாராகும் வலியைப் புரிந்து கொள்ளுங்கள். 3 ஆண்டுகளாக ஆள்சேர்ப்பு நடக்கவில்லை. அவர்கள் ஏமாற்றம் மற்றும் விரக்தியில் உள்ளனர். விமானப்படை ஆட்சேர்ப்பு முடிவுகள் மற்றும் நியமனங்களுக்காக இளைஞர்கள் காத்திருந்தனர். ஆனால் பதவி, ஓய்வூதியம், ஆட்சேர்ப்பை நிறுத்தியது என அனைத்தையும் மத்திய அரசாங்கம் பறித்துள்ளது" என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. சமீபத்திய தகவலின்படி, காங்கிரஸின் இந்த ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் இருக்கும், இதில் பல பெரிய முக்கியத் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பங்கேற்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க: Agneepath Scheme Protest: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 3வது நாளாக போராட்டம் - ரயில்களுக்கு தீ வைப்பு

இதற்கிடையில், CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸில் 'அக்னிவீரர்'களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அக்னிபாத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பான 21 என்பதில் இருந்து 23 வயது என அரசு நீட்டிப்பு வழங்கியுள்ளது. 

இது குறித்த தகவலை உள்துறை அமைச்சர் அலுவலகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. உள்துறை அமைச்சர் அலுவலகம் தனது ட்விட்டர் கணக்கில், CAPF மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஆட்சேர்ப்புகளில் அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் முடித்த அக்னிவீரர்களுக்கு 10% காலியிடங்களை ஒதுக்க உள்துறை அமைச்சகம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. சிஏபிஎஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச நுழைவு வயது வரம்பில் 3 ஆண்டுகளும், அக்னிபத் திட்டத்தின் முதல் தொகுதிக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

மேலும் படிக்க: Agneepath: அக்னிபாத் ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பு 23: மத்திய அரசு

தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. பொது மற்றும் தனியார் வாகனங்கள் தாக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை பல மாநிலங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அக்னிபாத்திற்கு எதிராக பெருகிவரும் போராட்டங்களுக்கு மத்தியில் போர்க்களமாக மாறியது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News