Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துமுடிந்து விட்டன. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், நேற்று கேரளா உட்பட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்தது. சில தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவே நடந்துமுடிந்துவிட்ட நிலையில், சில தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்களே அறிவிக்கப்படாத நிலையும் உள்ளது. அதில் உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளும் அடங்கும். காங்கிரஸ் கட்சி இன்னும் இத்தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் சற்று பொறுமையாக இருக்குமாறும், இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அமேதி, ரேபரேலி தொகுதி தொடர்பாக இன்று காங்கிரஸின் பெரிய கூட்டம் நடைபெற உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும்.
செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “வயநாடு மக்கள் ராகுல் காந்தியை எம்பியாக விரும்புகிறார்கள். அதனால்தான் அவர் அந்த தொகுதியில் இருந்து போட்டியிட தீர்மானித்தார். அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.
அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே அமேதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு நேர் மாறாக காங்கிரஸ் கட்சி இன்னும் தங்கள் வேட்பாளரை கூட அறிவிக்காத நிலை அக்கட்சி தொண்டர்கள் இடையே கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 2ஆம் கட்ட தேர்தல்: எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வாக்குப்பதிவு?
உத்தர பிரதெசத்தின் ரேபரேலி பல தசாப்தங்களாக காங்கிரஸ் மற்றும் காந்தி-நேரு குடும்பத்தின் கோட்டையாக இருந்தது. அமேதியும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. ஆனால், அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இப்போது அமைதி நிலவுகிறது. 'ராகுல் இல்லாமல் எதுவும் இல்லை' என்ற பேனர் இப்போதுதான் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அலுவலகத்தைப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
2019 ஆம் மக்களவைத் தேர்தலில் அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்த பிறகு, அமேதி மீதான ஈர்ப்பு ராகுலுக்கு போய் விட்டது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அமேதி மக்களவைத் தொகுதியில், ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் சமாஜ்வாதி கட்சி இரண்டு இடங்களையும் பாஜக மீதமுள்ள 3 இடங்களையும் கைப்பற்றின. சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களும் பாஜகவுக்கு உதவினர். சமாஜ்வாதி கட்சி கடந்த பல ஆண்டுகளாக மக்களவைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. ராகுலும், பிரியங்காவும் இப்போது இங்கிருந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அது தவறான செய்தியாக வெளிச்செல்லும் என்று அகிலேஷ் யாதவ் காங்கிரஸிடம் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. கட்சி எடுக்கும் ஒரே ஒரு தவறான முடிவு கூட அங்கு அக்கட்சியை மூழ்கடித்துவிடக்கூடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ