டிக்டாக்கை (Tiktok) தடைசெய்த பிறகு சிங்காரி (Chingari) என்னும் செயலி, மக்களின் தேர்வாக உள்ளது. Tiktok தடைக்கு பிறகு, இந்த செயலி லட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்த பின்னர், மக்கள் இப்போது Made in India செயலிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
டிக்டாக்கை தடைசெய்த பிறகு சிங்காரி (Chingari) என்னும் செயலியை மக்கள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
ALSO READ | விண்வெளி வீரர்கள் சந்திக்கும் கழிப்பறை பிரச்சனையை தீர்க்க NASA முயற்சி...!!!
புதுடெல்லி: டிக்டாக் (Tiktok) உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்த பின்னர், இப்போது மக்களின் போக்கு இந்திய செயலிகளை நோக்கி நகரத் தொடங்கியது. திங்கள்கிழமை இரவு முதல் நண்பகல் வரை சுமார் 30 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்தனர். மூத்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூட இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.
இந்த செயலியை பெங்களூரைச் சேர்ந்த புரோகிராமர்களான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் கடந்த ஆண்டு உருவாக்கினர், இந்த செயலி கூகிள் பிளே ஸ்டோரில் முதலிடத்தில் உள்ளது.
தற்போது இந்தியர்களுக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டிக்-டாக் போன்ற ஒரு தளம் தேவை என்பதால், நாங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதை கொடுக்க முயற்சிக்கிறோம். சிங்காரி செயலியில் பல தொழில் அதிபர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த தளத்தின் மூலம் நாங்கள் சமூகத்திற்கு இலவசமாக சேவையை வழங்குவோம்.
தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, முன்னதாக, ஒருபோதும் டிக் டாக் செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால் மேக் இன் இந்தியா செயலியான இதை ஆதரிக்கும் நோக்கில் அதை பதிவிறக்கம் செய்தார். இதை பதிவிறக்கம் செய்து, "நான் உங்களுக்கு இதின் மூலம் ஊக்கம் அளிக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ | டிக் டாக் மற்றும் பிற சீன செயலிகள் மீது அரசு தடை விதித்துள்ளதன் தாக்கம் என்ன..!!!
இந்த செயலி மூலம், வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலா, பதிவேற்றலாம், நண்பர்களுடன் சேட் செய்யலாம், புதிய நபர்களுடன் சேட் செய்யலாம், உள்ளடக்கத்தைப் பகிரலாம், உள்ளடக்கத்தை பிரவுஸ் செய்யலாம். இந்த செயலி ஆங்கிலம், இந்தி, பங்களா, குஜராத்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே LAC பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டிக்டாக் (TikTok), UC ப்ரவுசர் மற்றும் கேம் ஸ்கேனர் (Cam Scanner) உள்ளிட்ட 59 சீன மொபைல் செலயிகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொது ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை காரணமாக சீனாவிற்கு ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.