மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மதியம் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்!!
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிராக NCP-காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டாக தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வாசித்தது. உச்ச நீதிபதிகளின் அதிரடி தீர்ப்பின் படி மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நவம்பர் 27-ஆம் தேதி (நாளை) நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சட்டசபை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-NCP-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ஆஜரான கபில் சிபல், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரவில் துணை முதல்வர் பதவியை அஜித்பவார் ராஜினமா செய்துள்ளதாக வெளியான தகவலால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் அளித்துள்ளார். அது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ். பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தனது ராஜினாமா முடிவை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிக்க உள்ளதாக தகவல் .