பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு சென்றிருந்தார்.
இதையடுத்து, மிசோராமில் அஸிவால் நகரில் 60-மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேகாலயாவில் ஷில்லாங்-நாங்ஸ்டோன்-ரோக்ஜெயிங்-துரா ஆகியவற்றை இணைக்கும் சாலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இவ்விழாக்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி பேசியபோது;
ஷில்லாங்-நாங்ஸ்டோன்-ரோக்ஜெயிங்-துரா சாலை திட்ட பணிகள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒரு நேரடி இணைப்பை உருவாக்கும். பயண நேரம் கணிசமாக குறைக்கப்படும். 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு 15 நாட்களுக்கு வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்று மந்திரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளேன்.
காலையில் வந்து மாலையில் டெல்லிக்கு திரும்பிவிட மாட்டார்கள். எங்கள் மந்திரிகள் இங்கு வந்தால் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து டெல்லி திரும்புவார்கள்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு அரசு 32 ஆயிரம் கோடி செலவில் நான்கு ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை அனுமதித்துள்ளது. மேகாலயாவை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்புகிறோம். கடந்த 2016 மே மாதத்தில் மேகாலயாவுக்கு நான் வந்திருந்த போது, சுற்றுலாத்துறை மேம்பாடு பற்றி பேசினேன்.
கடந்த ஆண்டு, நான் வடகிழக்கு சபை கூட்டத்தை ஷில்லாங்கில் ஆரம்பித்தேன். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு, வடகிழக்கு சபை கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. மாநிலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி அளித்துள்ளது, என்று கூறினார்.
It will boost economic activity and establish a direct link between the important towns of the state, Shillong & Tura. Travel time will be significantly reduced. Our motto is 'Transformation by transportation': PM Modi on inauguration of Shillong-Nongstoin-Rongjeng-Tura Road. pic.twitter.com/5IcfXlkaEx
— ANI (@ANI) December 16, 2017
When our govt came to power in 2014, I gave clear instructions to my ministers that one of them must visit North-east in every 15 days. Visit shouldn't be like you reached there in morning & return Delhi in evening. When our ministers come here, they stay & meet people: PM Modi pic.twitter.com/rwgSlE8dmr
— ANI (@ANI) December 16, 2017
Across the North-East the Union Government has sanctioned around four thousand kilometers of National Highways, for an amount of over Rupees thirty two thousand crore: PM Narendra Modi in Shillong pic.twitter.com/qxZWY1CMjh
— ANI (@ANI) December 16, 2017
During my last visit to Meghalaya in May 2016, I spoke about promotion of tourism in the State. We want to make Meghalaya a top tourism destination. Government of India has sanctioned around Rs One hundred crores for development of tourist destinations in the State: PM Modi pic.twitter.com/pYCCQ4tm1k
— ANI (@ANI) December 16, 2017
In 2022, the nation will complete 75 years of Independence. This will also be the year when Meghalaya will complete 50 years of constitution. 75 years of independence, 50 years of constitution & national games. This is an excellent opportunity for state to make new oaths: PM Modi pic.twitter.com/mSI2Jv00jc
— ANI (@ANI) December 16, 2017