Lehயில் தாய், Delhiயில் குழந்தை, விமானத்தில் பறந்துவரும் தாய்ப்பால்...காரணம் தெரியுமா?

இன்னும் பெயர் கூட வைக்கப்படாத ஒரு மாத பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற லே-யில் இருந்து தினமும் 1000 கிலோமீட்டர் பயணித்து வருகிறது தாய்ப்பால் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2020, 04:01 PM IST
  • பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது
  • தாய்ப்பால் தானம் கொடுப்பது தற்போது அதிகரித்து வருகிறது
  • தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளன
Lehயில் தாய், Delhiயில் குழந்தை, விமானத்தில் பறந்துவரும் தாய்ப்பால்...காரணம் தெரியுமா? title=

புதுடெல்லி: குழந்தைக்காக பெற்றோர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்… ஆனால் தினசரி ஆயிரம் கி.மீ கடந்து தாய்ப்பாலை கொண்டு வருவது என்பது ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. 

இதுவரை யாரும் கேள்விப்படாத இந்த உண்மைச் சம்பவம் தற்போது தினசரி நிகழ்வாக தொடர்கிறது. லே-வில் (Leh) ஒரு மாதத்திற்கு முன்னர் பிறந்த குழந்தைக்காக 1000 கிலோமீட்டர் பயணிக்கிறது தாய்ப்பால்.

தாய் லே-வில் இருக்கிறார், குழந்தை டெல்லியில் இருக்கிறது. இந்த நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது? 

பிறந்த ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. குழந்தைக்கு பெயர் சூட்டுவதை விட, அதன் உயிரைக் காப்பாற்றுவதிலே பெற்றோர்கள் அல்லும் பகலும் ஈடுபட்டிருக்கின்றனர். 

குழந்தை பிறந்த மறுநாளே, உடல்நலக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்காக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. குழந்தையின் சுவாசக்குழாயும், உணவுக் குழாயும் ஒன்றோடொன்று இணைந்திருந்தன. எனவே குழந்தை பிறந்த உடனேயே அறுவை சிகிச்சை செய்வது அவசியமானது. 

எனவே, குழந்தை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் லே-வில் உள்ள தன்னுடைய தாயின் பாலைக் குடிக்கிறது.

 

ALSO READ | குழந்தை நலத்திற்கு ஆட்டுப்பால் நல்லது; ஆஸ்திரேலியா பல்கலை.,!

 

தாய்ப்பாலை லே-வில் இருந்து கொண்டு வரும் இந்த தொடர் பயணத்தை யாருமே கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. தினசரி காலையில் குழந்தையின் தந்தை Jikmet Wangdus டெல்லி விமான நிலையத்தில் காத்திருப்பார். லேவிலிருந்து விமானப் பணியாளர்களின் உதவியுடன் Jikmet Wangdus-இன் நண்பர், தாய்ப்பாலை டெல்லிக்கு அனுப்புகிறார். சரியாக ஒரு மணி நேரத்தில் டெல்லிக்கு வந்து சேரும் தாய்ப்பாலை வாங்கிக் கொண்டு குழந்தையின் தந்தை மருத்துவமனைக்கு விரைந்து செல்வார். 

குழந்தையும், தந்தையும் டெல்லியில் இருக்கும்போது, தாய் மட்டும் ஏன் லே-வில் இருக்கிறார்? அவரும் டெல்லியில் இருக்கலாமே என்று கேள்வி உங்களுக்குத் தோன்றுகிறதா?

சிசேரியன் மூலம் குழந்தையை பிரசவித்த அந்தத் தாய் மிகவும் பலவீனமாக இருக்கிறார். லே-விலிருந்து டெல்லிக்கு அவர் பயணிப்பது அவரது உடல்நிலையில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், தாய் லே-வில் தவிப்புடன் காத்திருக்கிறார். தனது குழந்தைகாக தினசரி 6 மணி நேரம் செலவழித்து, தாய்ப்பாலை அந்த தாய் பீய்ச்சி சேமிக்கிறார்.

 

ALSO READ | கொரோனாவால் இறந்த 4 மாத குழந்தை.. கடைசி நேரத்தில் கூட அருகில் இருக்க முடியவில்லை

 

குழந்தை பிறந்த மறுநாளே லேயிலிருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டதாக மேக்ஸ் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் டாக்டர் பூனம் சிதானா தெரிவித்தார். குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் அறுவைசிகிச்சை செய்து பலவீனமாக இருக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்ற நிலையில், தாய்ப்பாலை குழந்தைக்காக கொண்டுவருவது தான் தங்கள் முன் இருந்த மாபெரும் சவால் என்கிறார் டாக்டர் பூனம் சிதானா.

விமான நிறுவன ஊழியர்கள், டெல்லியில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோர் மற்றும் பல அறியப்படாத பயணிகள் என பலரும் இந்த பச்சிளம் குழந்தைக்காக அல்லும் பகலும் கடுமையாக உழைக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் குழந்தையை லேயில் உள்ள தாயிடம் அனுப்பிவிடலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

Trending News